முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் தேர்தல்

 18-வது  லோக்சபா நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது.                                 தொகுதியின் வேட்பாளர்களாக 01) கன்னியாகுமரி காங்கிரஸ் - விஜய் வசந்த் பாஜக - பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக - பசிலியான் நசரேத் நாம் தமிழர் - மரிய ஜெனிபர் 02) திருநெல்வேலி காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ் பாஜக - நயினார் நாகேந்திரன் அதிமுக - ஜான்சி ராணி நாம் தமிழர் - பா.சத்யா 03) தென்காசி திமுக - ராணி ஸ்ரீகுமார் தமமுக - ஜான் பாண்டியன் புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி நாம் தமிழர் - இசை மதிவாணன் 04) தூத்துக்குடி திமுக - கனிமொழி தமாகா - SDR.விஜயசீலன் அதிமுக - சிவசாமி வேலுமணி நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன் 05) இராமநாதபுரம் ஐயுஎம்எல் - நவாஸ்கனி ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம் அதிமுக - ஜெயபெருமாள் நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால் 06) விருதுநகர் காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர் பாஜக - ராதிகா சரத்குமார் தேமுதிக - விஜய பிரபாகர் நாம் தமிழர் - கெளசிக் 07) தேனி திமுக - தங்க தமிழ்செல்வன் அமமுக - TTV.தினகரன் அதிமுக - நாராயணசாமி நாம் தமிழர்
சமீபத்திய இடுகைகள்

மாதிரி நடத்தை விதிமுறைகளை (எம்.சி.சி) அமல்படுத்துவதை பொதுத் தளத்தில் வைக்க தேர்தல் ஆணையம் முடிவு

முதல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஒரு மாத காலத்தில்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி நடத்தை விதிமுறைகளை (எம்.சி.சி) அமல்படுத்துவதை பொதுத் தளத்தில் வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சில நேரங்களில் சில பகுதிகளிலிருந்து எழுப்பப்படும் சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இதில் விளக்கம் அளிக்க ஆணையம் முற்பட்டுள்ளது. தற்போதைய இந்த நிலை, மீதமுள்ள காலத்திற்கும் பொருந்தும். மாதிரி நடத்தை விதிமுறைகள் (எம்.சி.சி) நடைமுறைக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் இந்த விதிகளுக்கு இணங்குவதில் தேர்தல் ஆணையம் பரந்த அளவில் திருப்தி அடைந்துள்ளது. மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச

அரசுப் பங்குப் பத்திரங்கள் விற்பனைக்கான ஏலம்

 '7.37% அரசுப் பங்குப் பத்திரங்கள் 2028', 'புதிய அரசுப் பங்குப் பத்திரங்கள், 2064' (வெளியீடு / மறு வெளியீடு) விற்பனைக்கான ஏலம் பலவகை விலை முறையைப் பயன்படுத்தி, விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.12,000 கோடிக்கு “7.37% அரசுப் பங்குப் பத்திரங்கள் 2028" ஐயும், ரூ.12,000 கோடிக்கு  "புதிய அரசுப் பங்குப் பத்திரங்கள் 2064" ஐயும், விற்பனை செய்வதற்கான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிணையத்திற்கும் எதிராக ரூ.2,000 கோடி வரை கூடுதல் சந்தாவை மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம். இந்த ஏலம்  மும்பயைில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தால் ஏப்ரல் 19, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படும். பத்திரங்களின் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் 5% வரை அரசுப் பத்திரங்களின் ஏலத்தில் போட்டித்தன்மையற்ற ஏல வசதிக்கான திட்டத்தின்படி தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலங்கள் இரண்டும் ஏப்ரல் 19, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூஷன் (இ-குபெர்) அமைப்பில் மின்னணு வடிவத்தில் சமர்

நார்த் பிளாக்கில் லேசான தீ விபத்து

பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் இடம் பெற்றுள்ள நார்த் பிளாக்கில் லேசான தீ விபத்து, யாருக்கும் காயம் ஏற்படவில்லை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் இடம் பெற்றுள்ள  நார்த் பிளாக் அறை எண் 209-ல் 2024, ஏப்ரல் 16, அன்று காலை 09.15 மணியளவில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இங்குள்ள ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு அமைந்துள்ள அறையில், மின் சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. சிஐஎஸ்எஃப், உள்ளிட்ட தீயணைப்பு சேவைகளின் கூட்டு முயற்சியால் 20 நிமிடங்களுக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது. கோப்புகள் எதுவும் சேதமடையவில்லை. சில தளவாடப் பொருட்கள் மற்றும் சில உபகரணங்கள் ஓரளவு சேதமடைந்தன.

தூய்மை இருவாரவிழா, 2024

தூய்மை இருவாரவிழா, 2024-ஐ நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா தொடங்கி வைத்தார் தூய்மை இருவாரவிழா 2024-ஐ, (2024 ஏப்ரல் 16 முதல் 30 வரை) நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா இன்று தொடங்கி வைத்தார். இந்த அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சத்ய பிரகாஷ், நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தூய்மையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியதுடன், தூய்மை இருவாரவிழா 2024-ன் போது மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்தக் காலகட்டத்தில், அமைச்சகத்தின் நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை அகற்றப்படும். பழைய, காலாவதியான மின்னணு மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்படும். மேலும், இந்த இருவாரவிழாவின் போது தில்லியில் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் ஒன்றில், பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியை நடத்தவும் உத்தேசிக்

இராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து

இராம நவமி விழாவையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ராம நவமி விழாவையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், "ராம நவமி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ ராமர் பிறந்த புனித தருணத்தில் கொண்டாடப்படும் ராம நவமி, உண்மை மற்றும் நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது. மதிப்புமிகு புருஷோத்தம் பிரபு ஸ்ரீ ராம் பணிவு, மனோபலம் மற்றும் துணிவின் கொள்கை கொண்டவர். பகவான் ஸ்ரீ ராமர் தமது உபதேசங்களுக்கு ஏற்ப தன்னலமற்ற சேவை, நட்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார். பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் மூலம், ராம ராஜ்யம் என்ற கருத்துக்கு ஏற்ப, அனைவரும் கண்ணியத்துடன் வாழும் ஒரு நாட்டை உருவாக்க உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்                                          மேலும்   இராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அ

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக முழுமையான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் குறித்த தேசிய பயிலரங்கம் ஒரு வலுவான மற்றும் நிலையான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுதில்லியில் ஒரு நாள் தேசிய  பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது, இது முழுமையான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, திட்டமிடல் மற்றும் தணிப்பு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு அனுராக் ஜெயின் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் வனப்பகுதிகளுக்கான தலைமை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர் திரு. ஜிதேந்திர குமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் பல்வேறு குழு விவாதங்கள் பயிலரங்கின் போது நடைபெற்றன