இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும் எனவும், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 28.12.2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 03.01.2026 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழிப் படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொ...
பிரபல எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: "ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி