முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளாட்சி பதவிகளுக்கு தயாராகும் ஊழல் பெருச்சாளிகள்

              பல சின்னம்,பல கட்சி அதோடு பலமுள்ள, பலமில்லாத சுயேட்சைகள்  குழப்பத்தில் மக்கள்.   திறவு கோல், சீப்பு, கட்டில், கார், சங்கு, பெயிண்ட் பிரஷ், வானொலி பெட்டி, அஞ்சல் பெட்டி, ஸ்கூட்டர், தொலைபேசி, அன்னாசிப்பழம், நாற்காலி, கோப்பை, ரயில் எஞ்சின், பந்து, தலைகவசம், வாளி, கண்ணாடி குடுவை, பட்டம், கத்தி, சாக்லெட், குடிசை, சைக்கிள் ரிக்?ஷா, மக்காச்சோளம், மாவரைக்கும் திரிகை, படகு, சாப்பாட்டு தூக்கு, சிம்னி விளக்கு, மரம், வண்டி' என, 30 சின்னங்கள் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.இதில் சீப்பு உள்ளிட்ட சிறிய பொருள்களை வாக்காளர்களுக்கு  வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களால்   பிளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடைகளில் சீப்புக் கிடைக்கவில்லைஉள்ளாட்சித் தேர்தலில் 200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள் இன்று 50 முதல் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள்.. பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிறகு ஆதரவு கூடுமா? குறையுமா? நடிகர் வடிவேல் பாணியில் பேசினா எடை குறைகிறது என்பதுபோல பிரச்சாரம் செய்தா ஓட்டு குறையுமோ.. ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் கிடைப

படம் எடுக்கும் முன்னாடி பாக்கியராஜுக்கு கதை சொல்லனுமாம்.திரையுலகில் இதுவே பேச்சு

                      சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்தின் கதை திருடப்பட்டது தான் என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்,                       இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் இயக்குநர் மித்ரன் தன் கதையை திருடி 'ஹீரோ' படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 'ஹீரோ' படம் கடந்த வாரம் வெளியான நிலையில், கதை திருட்டு நடந்தது உண்மைதான் என்று இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார் இது தொடர்பாக உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 'இயக்குநர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்தின் டீசர் மற்றும் விளம்பரங்களைப் பார்த்தேன். அந்த படத்தின் கதை, நம் எழுத்தாளர் சங்கத்தில் நான் 26.04.2017 அன்று பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான். எனவே, என் கதைக்கு உண்டான நியாயம் வழங்க வேண்டும்' என்று கோரி 29.10.2019 தேதியில் ஒரு புகாரை நமது ச

பிடதியை குடும்ப சொத்துக்கும் நித்தி அம்மாவிடம் அனைத்து சக்தி

                          நித்தி(ராஜசேகர்)அப்பா வேணுகோபால்  இறந்துவிட அம்மா  லோகநாயகியின்  செல்லப்பிள்ளை.  அம்மாவை  தனது பிடதி ஆசிரமத்திற்கே அழைத்து வந்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு.? நித்தி தப்பிச் செல்லும்போது  ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வயதான  அம்மாவிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். அத்துடன்  ஆசிரம செலவுகளுக்காக 20 கோடி ரூபாயை வங்கியில் போட்டிருக்கிறார். தன்னுடன் இருக்கும் பக்த கோடிகளுக்கு சம்பளம் எதுவும் நித்தி கொடுப்பதில்லை. உணவும் உடைகளும் தான் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொருவரும் நித்தியின் பெருமைகளைச் சொல்லி, வி.ஐ.பி.க்களை சந்தித்து உண்டியல் நிதி(பிச்சை) திரட்டவேண்டும்.  ஆசிரமத்தில் செலவுகளே இல்லை. இந்தியா முழுவதும் பலரது சொத்துகளை மோசடி செய்த நித்திக்கு மொத்தம் 600 வகைச்  சொத்துகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அதில் பல பினாமி பெயர்களில். சொத்துக்கள் எல்லாவற்றையும் டிரஸ்ட்டுகள் மூலம் நித்தி நிர்வகித்து வந்தார்.                           அவரை சந்தித்து "ஆன்மிக தியான வகுப்புகளுக்கு' என கொடுக்கப்படும் பணத்தை அமெரிக்காவில் "லைப் ப்ளிஸ்' என்ற பெயரில்

மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அமைச்சர் தீவிரம்

                    தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்.. ஆவணங்கள் தேவையில்லை என விளக்கம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் பயோமெட்ரிக் கேட்கப்படாது என்றும் மக்கள் கூறும் தகவல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.                          நாடு முழுவதும் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்துக்குப்பின் அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது இயல்பு. அதன்படி வரும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள கணக்கெடுப்பு 8-வது கணக்கெடுப்பாக நடத்தப்பட உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரிபார்த்தல் பணி, வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு  கட்டங்களாக நடத்த உள்ளது 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீட்டின் நி

முன் தேதியிட்டு விவசாய நகைக்கடன் தடாலடி வட்டி உயர்வு அதிர்ச்சியில் விவசாயிகள்

          விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன்   வட்டி மானியம் குறைப்பு - 4 சதவீதத்தில் இருந்து 9 சதவிகிதமாக வட்டி விகிதம் அதிகரிப்பு விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் வட்டிக்‍கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவசாய நகைக்‍கடன் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால், அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். 3 லட்சம் ரூபாய்வரை கடன் பெற, விவசாய நிலங்களின் விவரங்களை வழங்கவேண்டும். இந்த கடன் திட்டத்தில் 7 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 3 சதவீதம், மத்திய அரசு, மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 11 சத

சிறப்பு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

                                  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் சிறப்புக் குழந்தைகளுக்கான மதர் சிறப்புப் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கிருஸ்த்மஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது அதில் பள்ளியின் தாளாளர் அருன்குமார் மற்றும் பெற்றார்கள் கலந்து கொண்டனர்.உலக அளவில் கிறிஸ்மஸ்  கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன. கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் ந

ரங்கோலிக்கு மாற்றமாகும் தென்னிந்திய கோலங்கள்

                        கோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளனதமிழர் பண்பாட்டுக்  கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற் பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்த

உழவர்தினம் மட்டுமே தமிழர்கள் விவசாய திருநாள்

                      ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கலாக்கிச் சூரியனுக்கும், அடுத்தநாள் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வ

நீதிமன்ற உத்தரவுபடி நடந்த திமுக பேரணி

                தி.மு.க. இன்று  நடத்திய பேரணிக்கு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி அரசு சொத்துகள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை கேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு அமைதியான போராட்டங்களை தடுக்க முடியாது :சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தபடி நடந்தது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு காவல்துறை மூலம் செய்திருந்தனர்அதிகாலையில் இருந்தே தாளமுத்து நடராசன் மாளிகை அருகே திமுக தொண்டர்களுடன் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் என பவர தொடங்கினர்.. சிரிய பெரிய  98  அமைப்புகளும் மக்கள் கூட்டம் சேரச்சேர, ஏதாவது ஒரு வகையில் சின்ன பூசலாவது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால், எங்கு பார்த்தாலும் போலீசாரின் கண்காணிப்புகள் இருந்து கொண்டே இருந்தது.. திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவுடனேயே பேரணி ஆரம்பித்துவிட்டது. பேரணி துவங்குவதற்கு முன்பேயே பங்கேற்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று

குடியுரிமை திருத்தச் சட்டம் அனைத்து தரப்பிலும் புரிந்துகொள்ளப்பட்டதா ?....ஒரு பார்வை

                  நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது அதை அமைதிபடுத்துவதற்குப் பதிலாக அரசியல் லாபத்திற்காக எரிகிற நெருப்பில் பலர் எண்ணெய் ஊற்றி குளிர்காய்கின்றனர். அவர்களின் கவனத்திற்கு... மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வது எல்லாம் சரி அல்ல. அதிலும் தவறுகள் இருக்கலாம். இருந்தால் தெரியப்படுத்தவும். தெரிந்துகொண்டு தெளிகிறேன். ஆனால் வாளி வாளியாக காவி சாயத்தை பூச ஓடி வரவேண்டாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இங்கே இருப்பது ஒரு கோடு. இந்தப் பக்கம் பாஜக ஆதரவு. அந்தப் பக்கம் பாஜக எதிர்ப்பு. பாஜக ஆதரவு பக்கத்திற்கு எதை செய்தாலும் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பது போல எதிர்க்கும் பக்கத்திற்கு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த இரண்டையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு கொஞ்சம் யதார்த்தத்தைப் பேசுவோம். அதுதான் நாட்டிற்கு நல்லது.  இந்த சட்டத்திருத்தம் மிகத்தெளிவாக இப்போது 3 நாடுகளில் இருந்து வந்த அகதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. காரணம் இந்த 3 நாடுகளிலும் இந்தியாவில் இருந்து பிரிவினையின் போது மக்கள் சென்று குடியேறினார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதா