விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் வட்டி மானியம் குறைப்பு - 4 சதவீதத்தில் இருந்து 9 சதவிகிதமாக வட்டி விகிதம் அதிகரிப்பு
விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் வட்டிக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவசாய நகைக்கடன் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால், அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். 3 லட்சம் ரூபாய்வரை கடன் பெற, விவசாய நிலங்களின் விவரங்களை வழங்கவேண்டும்.
இந்த கடன் திட்டத்தில் 7 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 3 சதவீதம், மத்திய அரசு, மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, விவசாய நகைக்கடன் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நகைக்கடன் திட்டம் உண்மையான விவசாயிக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய, 'கிசான் கிரெடிட் கார்டு' வழியாக மட்டுமே கடன் வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளின் (AGL) நகைக்கடன்கள் வட்டி விகிதம் முன் தேதியிட்டு அக்டோபர் முதல் தேதிமுதல் உயர்த்தியுள்ளதால் முன்பு நகை அடமானம் வைத்தவர்கள் கவலை கொண்டுள்ளனர்.சம்பள உயர்வு போல் முன்தேதியிட்டு வட்டி வாங்கி விவசாயிகள் வாழ்வில் கடன்சுமை ஏற்றுவது பலரை பாதிக்கவைக்கும். என்பதில் மாற்றமில்லை, வட்டி விகிதம் முன்பிருந்த 35 பைசாவிலிருந்து 90 காசுகளானதாலும் முன்னறிவிப்பு இல்லாமலும் அமல்படுத்தப் படுவதால் விவசாயிகள் அறுவடை வருமானம் முழுவதும் வட்டிகட்டுவதா....வயிறு கழுவுவதா...ஏன்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது...பாதுகாக்கப்பட்ட நகைக்கடனுக்கு வட்டி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய விவசாயிகள் தரப்பு கோரிக்கையாகும் .வெட்டிப்போட்ட என் நிலங்களைக் கண்டு
வேதனையில் வெட்டி சாகிறேன்..
கட்டிப்போட்ட கைகளை கண்டு
தட்டி கேட்க யாராவது வருவீர்கள் என்று…
நான்
விதைத்த விதைகள்
மண்ணிலும் மனதிலும் வளர
உயிரை உரமாக்கி உறங்குகிறேன்..
உறங்காத நினைவுகளுடன்.வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி ...அறுவை அணைத்தும் . யாருக்கு ...கவலையுடன்
-ஏழை விவசாயி
கருத்துகள்