முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிடதியை குடும்ப சொத்துக்கும் நித்தி அம்மாவிடம் அனைத்து சக்தி

                         நித்தி(ராஜசேகர்)அப்பா வேணுகோபால்  இறந்துவிட அம்மா  லோகநாயகியின்  செல்லப்பிள்ளை.  அம்மாவை  தனது பிடதி ஆசிரமத்திற்கே
அழைத்து வந்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு.? நித்தி தப்பிச் செல்லும்போது  ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வயதான  அம்மாவிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். அத்துடன்  ஆசிரம செலவுகளுக்காக 20 கோடி ரூபாயை வங்கியில் போட்டிருக்கிறார்.
தன்னுடன் இருக்கும் பக்த கோடிகளுக்கு சம்பளம் எதுவும் நித்தி கொடுப்பதில்லை. உணவும் உடைகளும் தான் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொருவரும் நித்தியின் பெருமைகளைச் சொல்லி, வி.ஐ.பி.க்களை சந்தித்து உண்டியல் நிதி(பிச்சை) திரட்டவேண்டும்.  ஆசிரமத்தில் செலவுகளே இல்லை. இந்தியா முழுவதும் பலரது சொத்துகளை மோசடி செய்த நித்திக்கு மொத்தம் 600 வகைச்  சொத்துகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அதில் பல பினாமி பெயர்களில். சொத்துக்கள் எல்லாவற்றையும் டிரஸ்ட்டுகள் மூலம் நித்தி நிர்வகித்து வந்தார்.
 
                        அவரை சந்தித்து "ஆன்மிக தியான வகுப்புகளுக்கு' என கொடுக்கப்படும் பணத்தை அமெரிக்காவில் "லைப் ப்ளிஸ்' என்ற பெயரில் இயங்கும் பதினைந்து அறக்கட்டளைகளில் கட்டச் சொல்லி. பணத்தைக் கட்டும்போதே அது அமெரிக்க பணமாகிவிடும். இப்படி நித்தி செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்தியாவை விட்டு ஓடிப்போக...! நேரிடும் என நித்திக்குத் தெரியலாம் என்கிறார்கள் அவரது பக்தைகள். அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் போது எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ரஞ்சிதாவை  சொத்துகளுக்கான வாரிசு என  அறிவிக்காமல் நித்தியின் அன்னை லோகநாயகியை சொத்துகளுக்கான வாரிசாக நியமித்தார். லாப நோக்கில் செயல்படாமல் ஆன்மிக நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையை  குடும்பச் சொத்தாக மாற்றி அமெரிக்க டிரஸ்ட்டுகள் பெயருக்கு இந்தியாவில் உள்ள அக்கவுண்ட்களில் பணத்தையும்  மாற்றி இப்படி நித்தி கொண்டு போன பணம் மட்டும் நாலாயிரம் கோடி ரூபாயைத் தாண்டுமாம் 


எல்லோரும் நித்தியை மனநிலை சரியில்லாதவர் என்கிறார்கள். நித்தி ஒரு பக்கா கிரிமினல். பணத்தையெல்லாம் தன் பெயரில் திரட்டினார். அதற்காக மற்றவர்களின் சொத்துகளை அபகரித்தார். தனக்கு அடியாட்கள் வேலை செய்வதற்கு படித்த, பணக்கார இளைஞர்களை ஆண்-பெண் என திரட்டினார். அவர்கள் தப்பித்துப் போகாதபடி மிரட்டினார். எல்லாம் பக்கா கிரிமினல்தனமான வேலைகள்'' என்கிறார்கள் அவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.
                           சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை அம்மா லோகநாயகிக்கு கொடுத்தாரேயொழிய செக் புத்தகங்களில் கையெழுத்துப் போடும் அதிகாரத்தை அவருக்கு தரவில்லை. உலகம் முழுக்க உள்ள வங்கிகளிலும் நித்தியின் கையெழுத்தில்தான் வங்கி பரிவர்த்தனை கணக்குகள் நடைபெறுகின்றன.
இங்கிலாந்துக்கு கொண்டுபோன நாலாயிரம் கோடியில்தான் பசிபிக் கடல் பகுதியில் நித்தி தீவு வாங்கினார். அதற்கு "கைலாசா' என பெயரிட்ட பிறகு நித்திக்கு காலம் கெட்டுப் போய்விட்டது. ரஞ்சிதாவிற்கு ஒருசில கோடிகள் மட்டும் தந்திருக்கிறார். அதுதான் அவர் வாழ்க்கையில் செலவு செய்த அதிகபட்ச நன்கொடை. கைது, புகார், வழக்குகள் என வந்தபிறகு இந்தியாவில் பினாமி பெயர்களில் இருந்த சொத்துகளை நித்தி விற்று வருகிறார். அவரது அம்மா லோகநாயகியைப் பயன்படுத்தி, நித்தியின் பெயரில் உள்ள டிரெஸ்ட்டுகளின் சொத்துக்களை விற்றுவருவதுதான் அவரது லேட்டஸ்ட் மூட்டை கட்டும் நடவடிக்கைகள் என்கிறார்கள் அவரது சீடர்கள். நித்தி இருக்குமிடத்தை சொல்ல வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சொன்ன வழக்கு எதிர்பார்த்தபடி 18-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. அதனால் நித்தியை "தேடப்படும் குற்றவாளி' என (பிரக்ளமேசன்) கர்நாடக போலீசாரின் புலனாய்வுப் பிரிவு அறிவிக்கிறது. புளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும் இந்த அறிவிப்பை கர்நாடக அரசின் சிபாரிசைப் பெற்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. நித்திமேல் பிடிவாரண்ட் இல்லாததால் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அடுத்த கட்டமாக நித்தி மீதான இரண்டு வழக்குகளை விசாரிக்கும் குஜராத் ஹைகோர்ட்டோ,பாலியல்  புகாரை விசாரிக்கும் கர்நாடக உயர்நீதிமன்றமோ வாரண்ட் பிறப்பித்தால் அது ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகிவிடும். ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஒருவரை எந்த நாட்டு போலீசாலும் கைது செய்ய முடியும். விமானத்தில் பறக்க முடியாது என ஏகப்பட்ட சிக்கல் உருவாகும்.
பொருளாதார குற்றவாளிகளான விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் இந்தியாவிலிருந்து தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்றார்கள். "நிதியமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றேன்' என்றார் மல்லையா. இங்கிலாந்துச் சட்டங்களின் பாதுகாப்பை மீறி இந்தியாவால் சட்டென நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால்தான் அவர்களை இங்கே கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், நித்தியோ பாலியல் குற்றவாளி. அவர் பதுங்கியிருப்பதோ தென் அமெரிக்கப் பகுதியாக இருக்கலாம்  அங்குள்ள சட்டங்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் இந்தியா எளிதாக கையாள முடியும். அதனால் நித்தி வேட்டை தீவிரமாகும்'' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.


                             இது போதாதென்று "எங்கள் குழந்தைகளை நித்தி கடத்தி வைத்திருக்கிறார்' என பலரும் கோர்ட்டுகளில் வழக்குப் போட்டு நித்திக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்கள்..
                           ஆக சந்யாசிகள் சல்லாபிகளாக இருப்பது இந்து சமயத்தில் துறவிகளை அவமதிக்கும் செயல் ..ஆக ஒரு போலி ஆ(சாமி) சிக்குவது உறுதி...ஜெயமே லயம்


 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...