கோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளனதமிழர் பண்பாட்டுக் கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற் பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் மீது பற்றுள்ள சகோதரிகள் மேலூர் மேகலா பத்திர ஏழுத்தர் சாந்தி உள்ளிட்டவர்கள் தீட்டிய பல வண்ணக் கோலங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டது .
"ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்".
கருத்துகள்