தமிழகத்தின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியீடு- தலைமைத் தேர்தல் அதிகாரி
ஜனவரி 4,5,11,12 ஆகிய நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குப்ச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ல் 1 லட்சத்து 2 ஆயிரத்து 210 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள படிவம் 8 ல் 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேரும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 A ல் 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 பேர் என மொத்தம் 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ள நிலையில் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் இணைந்து பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்