தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பி.,யுடன் சண்டையிட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் குறிப்பு எழுதி வைத்து விட்டு, மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் பணியில் இல்லை என்றும், அவர் அங்கு சரிவர காவல் பணிகளை மேற்கொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டி காவல் நிலைய பொதுக் குறிப்பேட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்றார். அதற்கு பதிலடியாக, காலை 6:50க்கு பணிக்கு வந்த தன்னை 7:15 மணிக்கு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க அறிவுறுத்தி வெளியே அனுப்பி வைத்ததாக, ரெகுராஜன் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு போலீஸ் ஸ்டேசனில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், புறக்காவல் நிலையம் கட்டுவதற்கு ஸ்பான்சர்களை பிடிக்க சொல்லி தொல்லை செய்வதாகவும், டிஎஸ்பி.,யின் டார்ச்சரால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சிகிச்சைக்கு செல்வதாகவும் டைரியில் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு ரெகுராஜன் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஸ்டேசனில் இருந்து சென்ற ரெகுராஜன், மாயமாகியுள்ளதால், குடும்பத்தினர்கள் தேடி வருகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டிய இன்ஸ்பெக்டரே காணாமல் போன சம்பவம் பரபரப்பானது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்