அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை பணிமாற்ற உத்தரவுகளை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 29.10.2019 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு 'சார்ஜ் மெமோ' குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணி மாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த
நிலையில், நேற்று இறுதித் தீர்ப்பளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்களுக்குப் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்தும், 'சார்ஜ் மெமோ' வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்