முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையாளி வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை

    சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
நடத்தி லேப்டாப், செல்போன், வங்கி கணக்குப் புத்தகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  ஜனவரி மாதம் எட்டாம் தேதி பணியிலிருந்த சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் வில்சன் பயங்கர வாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர்  கைது செய்யப்பட்டு,  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு முகமை அதாவது என்.ஐ.ஏ.வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று நான்கு  இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.
நெய்வேலி டவுன்‌ஷிப் ஏழாவது வட்டம் பெரியார் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் காஜாமொய்தீன். இவரது முதல் மனைவி இந்திரா காந்தி.  என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் செவிலியராக பணியில் இருக்கிறார்.  என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நெய்வேலியில் உள்ள காஜாமொய்தீன் வீட்டுக்கு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத இந்திராகாந்தி திகைத்து நின்றார். பின்னர் இந்திரா காந்தி, இவரது மகன் முஜாஹிதீன், அவரது மனைவி பிரியதர்‌ஷினி, இந்திரா காந்தியின் தாயார் யசோதா ஆகியோரிடம் விசாரணை நடத்தி. வீடு முழுவதும்  சோதனை நடத்தப்பட்டு  காலை 10 மணிக்கு முடிவடைந்தது. சோதனையில்  வீட்டில் இருந்த 3 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை மற்றும் விசாரணை அனைத்தும் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கிராமம் புதுத்தெருவில் காஜாமொய்தீனின் மூன்றாவது மனைவி பத்தா உன்னிசாவின் வீடு உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் ஹமீத் தலைமையில் டெல்லி சப்-இன்ஸ்பெக்டர் சுனில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பத்தா உன்னிசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு விசாரணை முடிந்து வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த செல்போன், வங்கி கணக்கு புத்தகங்கள், காஜா மொய்தீன் தமிழில் எழுதிய கவிதைகள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பாலவாய் கிராமத்தில் காஜாமொய்தீன் பெயரில் உள்ள நிலத்துக்கான பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். பத்தாஉன்னிசாவுக்கு அப்துல்லா. 8வயது ஒசாமா.6வயது  என்ற இரு மகன்கள் உள்ளனர்.
காஜா மொய்தீனின் கார் டிரைவர் ஜாபர் அலி.  சொந்த ஊர் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டம்பாக்கம் ஆகும். காஜாமொய்தீனுடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையில்  நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணியளவில் தொடங்கிய சோதனை 9.30 மணி வரை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த ஜாபர் அலியின் தாயார், தம்பி மற்றும் தங்கை ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிவில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை மதினா நகரில் காஜாமொய்தீனின் கூட்டாளி அப்துல்சமதின் வீடு அமைந்துள்ளது. இங்கு தற்போது அவரது தாய் அபினுனி‌ஷா, தம்பி பகது ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் அம்னேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று காலை ஆறு மணிக்கு சோதனை நடத்தினார். பின்னர் அவர்கள், அப்துல்சமதின் தாயார், தம்பியிடம் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். கடலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நான்கு  இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம்  வில்சன் இறப்புக்கு நீதி கிடைக்க நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...