மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் ஆதிதிராவிடப் பெண் மாநகராட்சி கவுன்சிலருக்கு பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா-பயாந்தர் மாநகராட்சியின் பெண் கவுன்சிலரான தன்னை எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து வருவதாக குற்றம்சாட்டும் காணோளிக் காட்சி இரண்டு நாட்கள் முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
அந்தப் பெண் அதில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா மற்றும் சஞ்சய் தர்கர் என்ற இருவர் மீதும் மீரா- பயாந்தர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைக் கைது செய்யப்படவில்லை என்று காவல்நிலைய அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்