கோபால் நாயக்கர் மகன் பங்காரு அடிகளார் 80 ஷஸ்டியப்த பூர்த்தி விழா மேல்மருவத்தூர்
பங்காரு அடிகள் 80 ம் ஆண்டு சதாபிஷேக நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில் ஆன்மீக, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு அடிகளாரின் 80வது அவதாரத் திருநாள், பெருமங்கல முத்து விழா மார்ச் 3ம் தேதி மேல்மருவத்தூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளும், நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக கலவையில் ஆதிபராசக்தி கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஆன்மிககுரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகள் பெரு மங்கல முத்து விழா சிறப்பாக நடைபெற்றது.
பாத பூஜையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதிபராசக்தி கலையரங்கத்தை அடிகளார் திறந்து வைத்தார். மேடை நிகழ்ச்சிகள் மூலமந்திரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பின்னர் ஆதிபராசக்தி குழுமக் கல்வி செயலர் ஆர்.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.
விழாவிற்கு ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர்கள் கோ.ப.செந்தில்குமார், ப.ஸ்ரீதேவி ரமேஷ், ப.உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன் மற்றும் பல் மருத்துவ கல்லூரியின் தாளாளரும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் இயக்குனருமான த.ரமேஷ், சேலம் தொழிலதிபர் ப. ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரிகளின் தாளாளர் இ. ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரத்தினகிரி பாலமுருகடிமை சுவாமிகள், வேலூர் நாராயணிபீடம் ஸ்ரீசக்தி அம்மா, வேலூர் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், பத்திரப்பதிவு அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சா. ஜெகத்ரட்சகன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் கி. விஷ்ணு பிரசாத், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர். காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜா.ல.ஈஸ்வரப்பன் மற்றும் திருக்கைலாய திருப்பணி நிறுவனர் சிவஸ்ரீ செ.ராஜேந்திரன், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் கோ.வி.செல்வம், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவர் ஜா.லஷ்மணன், வாணியம்பாடி பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், வேலூர் திருமண்டிலம் அருட்தந்தை டி.எஸ்.சி.மேனன், ஆற்காடு தொழிலதிபர் மு.சௌகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர் கோ. ப.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து ஆதிபராசக்தி குழுமக் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்புரை ஆற்றினார்.
விழாவில் நலத்திட்ட உதவியாக பயனாளிகளுக்கு ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடிகளார் வழங்கினார். இத்திட்டத்தில் அடிப்படையில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளுக்கு 80 நவீனக் கழிப்பிடங்கள் கட்டிதரப்படும். தற்போது பத்து கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் மரக்கன்றுகள் அரசாங்க இடம் மற்றும் பொது இடங்களில் நட்டு பராமரிக்கப்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு உலக வரைபடம் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி தகுதி பெற 1000 எண்ணிக்கையிலான கேள்வி பதில்கள் அடங்கிய கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு கம்ப்யுட்டர், பிரிண்டர், பேன், மேஜை, நாற்காலி, இரும்பு பீரோ மற்றும் கரும்பலகை வழங்கப்பட்டது. கலவை, ஆற்காடு தாலூக்காவிற்கு கம்ப்யூட்டர் மேஜை, குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. கலவை அரசு மருத்துவ மனைக்கு இன்வெட்டர் பேட்டரி போன்றவை வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலவை ஆதிபராசக்தி குழுமக் கல்லூரி மாணவ – மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தன
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்