ஊழல் மலிந்துள்ளன துறைகளில் இந்துசமய அறநிலையத்துறையும் ஒன்று சிலைகடத்தல் விவகாரமாகட்டும்,வேறு ஸ்கீம் நிறைவேற்றுவதாகட்டும் ஊழல் தான் இதை தடுக்க மத்திய அரசே தனிவாரியம் ஏற்படுத்தினால் அன்றி வேறு சாத்தியமில்லை ஆகவே விரைவில் தனி நபர் மசோதா தாக்கலாக வாய்ப்பு உண்டு .இது பிரதமராகும் முன் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்த மசோதா.
"இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும்போது இந்து மதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம் தான் இன்று அவர் மத்திய ஆட்சியில் வந்து விட்டதால் மசோதாவாக தாக்கலாக வாய்ப்பு உண்டு எனத் தகவல் .அப்படி ஆனால் இந்துக் கோவில்கள் இனிமேல் மத்திய அரசு நியமனம் பண்ணும் தனி வாரியத்திடம் கொடுக்கப்படும்.
மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத்துறை,தேவஸ்தானம்,தேவசம்போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டு விடும்.
உண்மையான சமத்துவம் என்பது எந்த மத விஷயத்திலும் அரசு தலையீடு கூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவாக இது இருக்கும்
வக்பு போர்டு, கிருஸ்துவ டயோஷியஸ் போன்று தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்துவிடும் சூழலில்
எல்லா மாநில அரசுகளும் இந்துக் கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விடவேண்டிய நிலை வரலாம்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின் கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப்படும்.
இது ஒரு நல்ல திருப்பம். இது இந்துக் கோவில்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்.தனி நபர் மசோதாவாக தாக்கலானாலும்,ஆளும் கட்சி ஆதரிப்பதால்,குரல் வாக்கில் நிறைவேறும் சாத்யம் உள்ளது.
நல்லது நடக்கும் என பலரும் எதிர்பார்க்கும் நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்