உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிகஉயிர்களைப் பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சம் பேர். மேலும் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடையவும் சாலை விபத்துக்கள் காரணமாக உள்ளன.
எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் விதிகளை பின்பற்ற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு சமீபத்தில் பல மடங்கு உயர்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய அரசால், புதிய மோட்டார் வாகனச் சட்டம் விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு தலக்கவசமே எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளதுபாம்பே (மும்பை) உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு. சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு முறையாக தலைக்கவசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுடன் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாகனங்கள் பதிவு செய்வதை நிறுத்தி விடுவோம் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகளின் இந்த உத்தரவையடுத்து வாகன விற்பனை முகவர்களிடம் நாக்பூர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடுமை காட்டத் தொடங்கியுள்ளனர். இதன்படி டீலர்கள் இரண்டு தலைக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நாக்பூர் நகர் மற்றும் நாக்பூர் கிழக்கு என இரண்டு போக்குவரத்துத்துறை அலுவலகங்களிலும் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இரண்டு தலைக்கவசங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா? என்பதை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்கின்றனர். வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''புதிய இரு சக்கர வாகனங்களை ஒப்படை செய்யும்போது, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தலைக்கவசம் வழங்க வேண்டும் என அனைத்து வாகன முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களது மோட்டார் வாகன ஆய்வாளர்களும், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அனைத்து வாடிக்கையாளர்களின் ரசிதுகளையும் சரிபார்க்கின்றனர்.
இரண்டு தலைக்கவசம் வாடிக்கையாளர்கள் பெற்றதை உறுதி செய்வதற்காக ரசீதுகள் சோதனை செய்யப்படுகிறது'என்றனர். இதுகுறித்து வாகன விற்பனை நிறுவனத்தில் சிலர் கூறுகையில், ''நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப, நாக்பூரில் உள்ள அனைத்து முகவர்களும் தற்போது இரண்டு ஹெல்மெட்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களிடம் தலைக்கவசம் இருப்பதாகவும், எனவே அதற்குப் பதிலாக விலையை குறைத்துக் கொள்ளும்படியும் கேட்கின்றனர். ஆனால் அதுபோன்ற வாதங்களை நாங்கள் நிராகரித்து விடுகிறோம்'' என்றனர். நீதிமன்றம் மற்றும் போக்குவரத்து அலுவலர்களின் அதிரடியால் புதிதாக இருசக்கர வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மத்திய மோட்டார் வாகன விதிகள், 138 (4)(f)-ன்படி, இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, வாகன உற்பத்தியாளர்கள் ஹெல்மெட்களையும் சப்ளை செய்ய வேண்டும். அதுவும் இந்திய தர நிர்ணய சட்டம் (Bureau of Indian Standards Act), 1986 (63)-ன் கீழ், இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) பரிந்துரைக்கு ஏற்ப அந்த ஹெல்மெட்கள் இருக்க வேண்டும
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்