மதுரையில் இரவு 1 மணிக்கு மேல் மட்டும் பைக்கை திருடும் சிறுவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை அனுப்பானடி தமிழன் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ், சிம்மக்கல்லில் மக்கள் மருந்தகம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மருந்தகத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்துள்ளது. இரவு 12 மணியளவில் தனது புல்லட்டில் வீட்டிற்கு வந்துள்ளார் காரல் மார்க்ஸ்.
வழக்கம் போல வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டில் மொபைல்ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த போது இரவு 2:15 மணிக்கு மருந்த டைல்ஸ் பணி நிறைவடைந்ததாக அந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது வெளியே வந்த காரல் மார்க்ஸ் தனது பைக் மாயமானது கண்டு அதிர்ந்துள்ளார்.
உடனே தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது சரியாக 1 மணிக்கு காரல் மார்க்ஸ் வீட்டிற்கு வந்த மூன்று பேர் லாவகமாக பைக்கை திருடி செல்லும் காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காரல் மார்க்ஸ். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு கைதாகி ‘வாய்தா’விற்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள லிங்கபிரவு, ஆதீஸ்வரன் என்ற சிறார் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
மதுரை வண்டியூரில் தனி வீட்டில் வசித்து வந்த இந்த இரு சிறார்களும் அனைவரும் உறங்கியபின் இரவு 1 மணியை தேர்வு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பல திருட்டில் போலீசார் மடக்கியதை தொடர்ந்து நகர் பகுதி வேண்டாம் எனக்கூறி, புறநகரான மேலூரில் வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இருந்தும் அது தொடர்பான வழக்குகளில் ஆஜர் ஆகாததால் ‘வாய்தா’ சிறார் என போலீசாரால் அழைக்கப்படும் இவர்களின் பார்வை தற்போது மீண்டும் மதுரை நகருக்குள் வந்திருப்பது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் விபரம் போலீசாருக்கு நன்கு தெரியும் என்பதால் பைக்கை எடுத்து செல்ல வேறொரு சிறுவனை உடன் அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுவன் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி சென்ட்டிமெண்ட், சிறார் குற்றவாளிகள், பைக் அபேஸ் என புதிய தலைவலியை தரும் இந்த சிறார்களின் விபரம் தெரிந்தும், அவர்கள் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்