இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு. இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென்னையில் உள்ள மணலியில் இருந்து தான் வேதிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் Coldbest - PC Syrup என்ற இருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த 17ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தன. 17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு Coldbest - PC மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், ‘டைதிலீன் கிளைகோல்' ( ‘diethylene glycol')என்ற வேதிப்பொருள் இருந்ததும், இதனால் விஷத்தன்மை மருந்தில் கூடியிருப்பதும் தெரியவந்தது என்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் உதவி மருந்துகள் கட்டுப்பாட்டாளர் சுரிந்தர் மோகன் தெரிவித்தார்.
இதையடுத்து Coldbest - PC இருமல் மருந்தின் தொகுதிகள் அனுப்பப்பட்ட எட்டு மாநிலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர், அந்த மருந்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி இமாச்சலப் பிரதேசம் (உற்பத்தியாளர் அமைந்துள்ள இடம்), ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரிகள் இந்த அறிவிப்பை அனுப்பி உள்ளார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்