நீட் தேர்வுகளில் முறைகேடு செய்த நபருக்கு ஹிந்தி தெரியாதவர் ஹிந்தியில் தேர்வு எழுதியுள்ளார் எப்படி மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுதி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்தது. அப்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் டேவிட் மகன் ராகுல், , சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி மைனாவதி மகள் பிரியங்கா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகம்மது ஷபி மகன் இர்ஃபான், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் மகன் பிரவீன், என பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின் படி ஐஜி சங்கர் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீஸார் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திவருகிறார்கள். 2019-2020 ஆம் கல்வி ஆண்டு போல 2018-2019 வது கல்வி ஆண்டிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. அதன்படி விசாரணை செய்த போலீஸாருக்குத் தமிழக மருத்துவக்கல்லூரிகளில் இரண்டாமாண்டு படித்துவரும் பத்து மாணவர்கள் மீது சந்தேகம் வரவே அவர்கள் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.
போலீஸாரின் வளையத்திலிருப்பவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகத்திற்கு அனுப்பி அதுதொடர்பாக அந்தந்த கல்லூரியின் முதல்வர்கள் விசாரணை நடத்தி 2018-2019ஆம் கல்வி ஆண்டில் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ்குமார் மீது சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திலிருந்து சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்தன் பேரில் பூக்கடை போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தி பின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 2018-2019 ஆம் கல்வியாண்டில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மேலும் ஒரு வழக்கைப்பதிவு செய்து புகாரளிக்கப்பட்டதும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவன் தனுஷ்குமார், குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டார். தனுஷ்குமார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், விசாரணையில் தனுஷ்குமார், பீகாரில் ஹிந்தி மொழியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் நடந்த கவுன்சலிங்கில் சென்னை மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்துள்ளார்.
பீகாரில் தேர்வு எழுதியதாக தனுஷ்குமார் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்து விசாரித்தபோதுதான் ஆள்மாறாட்டம் நடந்த தகவல் தெரியவந்தது. தனுஷ்குமார் என்ற பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு எழுதியிருப்பதைக் கண்டறிந்தோம். தனுஷ்குமார், நீட் தேர்வை ஹிந்தியில் எழுதியதாக மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது. அதனால் அவர் சிக்கினாரஸ தனுஷ்குமார் அப்பா தேவேந்திரன் தொழிலதிபராதலால் பல லட்சம் கொடுத்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவன் தனுஷ்குமார், அவரின் தந்தை தேவேந்திரன் ஆகியோரைப் பிடித்துள்ளோம். தனுஷ்குமாருக்காக பீகாரில் தேர்வு எழுதியவர் யாரென்று விசாரணை நடக்கிறது சாதாரண அப்பாவிப் பிள்ளைகளை சோதனை என்ற பெயரில் கெடுபிடிகள் செய்து மன உளைச்சல் தந்த தேர்வு அலுவலர் பூனைகளை சோதனை செய்து பெரிய யானைகள் தப்பிய கதை இப்போது வெளிவரும் நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்