பீகார் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தக்கூடாது.ஏன சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
பீகார் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இரண்டாவது நாளில் , பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இருப்பினும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) அதன் 2010 வடிவத்தில் செயல்படுத்த ஒரு தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினர்.
முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற பிரச்சினைகள் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், "தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க கோரி பீகார் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது" என்று கூறியிருந்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்