மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமான சேவை மட்டும் அவசரகாலச் சேவையாக ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து சிறப்புச் சேவையாக இயக்கப்பட இருக்கிறது.இந்த விமானம் மலேசியாவிலிருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளுடன் இரவு 11.25 க்கு மலேசியா செல்கிறது.
மீண்டும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் காலை 9.35 க்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும் மலேசியாவிற்கு காலை 10.25 க்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சிராப்பள்ளிக்குச் சுற்றுலாவில் வந்து மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப முடியாமல் 100 க்கும் மேற்பட்டோர் தனியார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும், கையிருப்புத் தொகை தீர்ந்து போய் சிரமப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது தங்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யதால் அவசர காலத் தேவையாக இந்த விமானம் இயக்கப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் அனைவ ருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மலேசியாவுக்கு செல்லத் தயாராகி வருகிறார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்