வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் நபர்கள் பதிவு செய்ய சிறப்பு இணையத்தளம். வெளிநாட்டில்.வேலைவாய்ப்புக் குச் சென்ற தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.வெளிநாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியாக தமிழக அரசு அறிக்கை: இந்தியா முழுவதும், கொரானா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்குத்தரவு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அமலிலிருந்து வருகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுளதால் , தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், சுற்றுலாப் பயணிகள், பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு திரும்பி வர வழியில் லாத நிலை ஏற்பட்டுள்ளதஸல். தமிழகத்திற்குத் திரும்ப விரும்பு கிறவர்களின் நலன் அவர்கள் குடும்பத்தினர் நலன் காத்திடும் நோக்கில் மொத்த எண்ணிக்கை அறியும் வகையிலும், தமிழகத் திற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக இணைதளப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org எனும் இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்