இலஞ்சம் வாங்கிப் பணியிட மாற்றம். நெஞ்சுவலி என மருத்துவமனையில் படுத்த இன்ஸ்பெக்டர். சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி உத்தரவு.
இலஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தால் ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இலஞசப் புகார் வந்ததால் நாகபட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர் வெளிப்பாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க லஞ்சம் பெற்றதாக கடந்த 20 ஆம் தேதி நாகை எஸ்பிக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து அவரை ஆயுதப்படை பணியில் சேருமாறு எஸ்பி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசம் ஆயுதப்படைக்குச் செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலியென உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதை அறிந்த எஸ்.பி செல்வநாகரத்தினம் ஆய்வாளர் மீது வந்த புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
பின் லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தால் ஆய்வாளர் சிவபிரகாசத்தை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்