தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தியுடன் சிறிதாக வரலாறு அறியலாம் .மே தினம்:-அமெரிக்கக் குடியேற்ற மாநிலங்களிலுள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” இயக்கம் உருவாக்கி 8 மணி நேர வேலைக் கோரிக்கை யை முன்வைத்து தொடர் இயக்கங் களை நடத்தி மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுக்க இவ்வியக்கமே மே தினம் உறுவாகக் காரணம்.தொழில் நகர்கள் நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோரென அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கி அதில் 1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்த வேலை நிறுத்தத்தினால், அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் மூடப்பட்டு. இரயில் போக்குவரத் தும் நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோ வில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.1889 ம் ஆண்டு ஜூலை மாதம் 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.18 நாடு களில் இருந்து 400 அங்கத்தினர் கள் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை மாநாடு கடுமையாக கண்டித்தது. 1890ம் ஆண்டு மே 1 அன்று அனைத்துல கத் தொழிலாளர்கள் இயக்கங் களை நடத்திட வேண்டும் எனுமஹ அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர்கள்மே தினமாக அனுசரிக்கும் நாள்.
இந்தியாவில் தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில் உள்ளது.மே தினப் பூங்காவும் உண்டு. சென்னை மாநகரில் முதன்முதலில்தொழிலா ளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமச் சீர்திருத்தவாதி யான ம. சிங்காரவேலர் தான் 1923 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அருகில் கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடியது வரலாறு.
உழைப்பால் வரும் மரியாதை உயிர்போனாலும் போகாதது.
கோவணத்தோடு குன்றின் மீது ஏறி நின்று கர்வமாய் பார்க்கும்
தைரியம் கடவுளுக்குப்பின் விவசாயிக்கு மட்டுமே உண்டு
படைப்பது மட்டுமா?பயிரிடுவதும்
தெய்வத் தொழில் தான்.! அவனும் ஒரு தொழிலாளிதான்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்