புதுக்கோட்டை ராஜகோபாலபுரத் தில் செயல்படும் திமுக கட்சி நபர் சபியுல்லாவின் நிஜாம் பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளதால் எந்த தொழிற்சாலை களையும் திறக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் இராஜகோபாலபுரத்தில் நிஜாம் பாக்கு நிறுவனம் இயங்கி வருகின்றது. கிளை நிறுவனங்கள் புதுக்கோட்டை மேட்டுபட்டி, மாலையீடு உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இதன் உரிமையாளர் புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த சபியுல்லா. தி.மு.க பிரமுகர். இங்கு நிஜாம் பாக்கு தவிர பேப்பர் கப், செயற்கை வாழை இலை தயாரிப்பு உட்பட, பல்வேறு தொழில்கள் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கை மீறி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் நிஜாம் பாக்கு தடையை மீறி இயங்கிவருவதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய அவர் முந்நூறுக்கும் அதிகமானோரைக் கொண்டு செயல்படும் நிறுவனத்திற்குச் சீல் வைத்தார். ஆலையை நடத்த அனுமதி பெற்றிருப்பதாக நிறுவனத்தினர் கூறியதாகவும், இவ்வளவு அதிகமான மக்களைக் கொண்டு பணியாற்றுவதற்கும், தனி மனித இடைவெளி முறையாக கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறி சீல் வைப்பு.
தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்