சென்னையில் தினசரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வரும் 24 வயது நிருபருக்கு கொரானா தொற்று இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் (மேன்சனில்) தங்கியிருந்தார். அவருக்கு கடந்த 17-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தங்கி இருந்த விடுதி மற்றும் தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவருடன் விடுதியில் இருந்த 7 பத்திரிகையாளர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அடுத்து சென்னை செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் (வயது 25) உள்ளவருக்கும் கொரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. ராயபுரம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவராவார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளனர். அடுத்து செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் மூன்று பத்திரிகையாளர்கள் பாதிப்பில் .கொரானா பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் முன்னின்று செயல்படும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து,சென்னையில் இரண்டு பத்திரிகையாளருக்கு கொரானாவால் பாதிப்பு. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜன்
''வெட்டியானுக்கு சுடுகாட்டிற்கு பிணம் வந்தால் தான் பணம்
நிமிடத்துக்கு நிமிடம் பரப்பு செய்தி வந்தால் தான் ஊடக முதலாளிகளுக்குப் பணம்.
எவன் வீட்டில் பிணம் விழுந்தால் என்ன. எனக்குத் தேவை பணம் இது தான் வெட்டியானுக்கும்.ஊடக முதலாளிக்கும் உள்ள ஒற்றுமை
மழை,வெள்ளம், புயல் காலம் போல நிமிடத்துக்கு நிமிடம் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தும் போக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்
கும்பல் கும்பலாக செய்தியாளர்களையும் ஒளிப்பதிவாளர்களையும் நிற்க வைத்து பேட்டி கொடுப்பவர்களுக்கும் கொரானா தொற்றும் என எடுத்துரைத்தோம்.
எவ்வித பணி உத்தரவாதம் இல்லாத வாழ்வாதாரமற்ற செய்தியாளர்களை வீதிக்கு வீதி அழைத்துச் செல்லாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தோம்
தலைமைச்செயலக செய்தியாளார் அறை உட்பட மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, காவல்துறை அலுவலகம்,மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறைகளை நிலைமை சீராகும் வரை பூட்டச் சொன்னோம்,
அரசு தரப்பு மற்றும் கட்சி செய்திகளை,செய்திப் படங்களை,வீடியோக்களை மெயில் மூலமாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்புங்கள் என்று சொன்னோம்
எவரும் செவி மடுக்கவில்லைகூரைப்பள்ளிகளை தடை செய்ய கும்பகோணத்தில் பள்ளி சிறார்கள் தீயில் கருக வேண்டும்
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சேலையூர் சிறுமி பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து பெற்றோர் முன் கொடூரமாக சாக வேண்டும் சாலைகளில் கட்டவுட் கட்டுவதை தடை செய்ய பள்ளிக்கரணையில் ஒரு சுபஸ்ரீ சாக வேண்டும்
அதேபோல் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பத்திரிகையாளர் எவராவது ஒருவர் செத்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்கும்
அப்படி சாகப்போவது நானாகவும் இருக்கலாம்..நீங்களாகவும் இருக்கலாம்.
நமக்கு நாம் தான் பாதுகாப்பு
விழிப்போடு இருப்போம்
விலகியே இருப்போம்
வீட்டிலேயே இருப்போம்
வேலையாவது.ஹைகோர்ட்டாவது அதை பிழைத்துக் கொண்டால் அப்போது பார்ப்போம்''. என பதிவு செய்கிறார்.நிலைமை அப்படி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்