தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மண்ணுக்கே உரித்தான மகத்துவம் 'கடலை மிட்டாய்' அதற்கு தற்போது புவிசார் குறியீடு கிடைக்காததால், தமிழகத்தில் பிற பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்களும், தரமற்ற வகையில் தயாரித்து ‘கோவில் பட்டி கடலை மிட்டாய்’ எனும் பெயரைப் பயன்படுத்துவதால் உண்மையான கோவில் பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கச் செயலாளர் சார்பில் கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு பெற 2014 ம் ஆண்டில் விண்ணப்பித்து. அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி, இதற் கான முயற்சிகளை எடுத்து வந்தார். புவிசார் குறியீடு கிடைத்தால் கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் `கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாது” என்பதே காரணம். தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது.அதில் தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாயும் சேர்ந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்