'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.. இங்கு வாழும் உயிரகளுக்கெல்லாம்'.. என்ற பண்பாடு காக்கும் புதுக்கோட்டை ரோசி பவுண்டேஷன் சார்பில் புதன்கிழமைக் காலை 29 ஏப்ரல் 2020 ல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நகர் நவம்பட்டியில் 200 கூலித் தொழிலாளார்கள் குடும்பங்களுக்கு இழுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார்,மற்றும் வட்டாச்சியர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், வழக்கறிஞர் ராமமூர்த்தி வழக்கறிஞர் மாதராபட்டி அழகர் மற்றும் இமை பௌண்டேஷன் நிறுவனர் செந்தில்குமார் ஆகியோர் பங்களிப்பில் அரிசி மற்றும் காய்கறிகளை புதுக்கோட்டை ரோஸி பௌண்டேஷன் தலைவரும் வழக்கறிஞருமான சு பழனிவேல் அவர்கள் வழங்கினார்கள். தொடரும் கோவிட்-19 ன் கொடுமை உழைப்பிழந்து உணவின்றி
உருகும் விழிகளின் கண்ணீரில் மிதந்த இழுப்பூர் கூலி மக்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.
கடமை நினைந்து கதவைத் திறந்து உணர்வில் இதயம் ஒன்றாகும் நிலைமை உணர்ந்து ரோசி முதியோர் இல்லம் செலவைக் குறைத்து உதவும் நிமிடம் அது
எழுந்து வா தோழா - நீ
எழுந்து வா என் தோழா..என ஆதரவுக்கரம் நீட்டும் ரோசி பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின்
உதவிக் கரங்கள் நீட்டுவோம் வரியவருக்கே எனும் அன்னமயகோஷம்.பலரின் பாராட்டுப் பெற்றது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்