சார்வரி தமிழ் வருடம் 2020 ல் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 7.20 க்கு கிருஷ்ணபட்சமும் சஷ்டி திதியும் மூல நட்சத்திர 4ம் பாதத்தில்
தனுசு ராசி, துலாம் லக்கினமாக நாள் அமைகிறது.
நவாம்சமாக கடக ராசியும், கும்ப லக்கினமாகவும், புதன் ஹோரையும் கேது மகா தசையும், சனி புத்தி என அமைந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது.சித்தர் இடைக்காடரின் பாடலில்
"சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு".
எனும் பாடல் கூறும் ஆண்டாக வருகிறது.
அறுபது நொடி கொண்டது ஒரு விநாடி, அறுபது விநாடி கொண்டது ஒரு நாழிகை,அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்,முன்னூற்று அறுபது நாள் கொண்டது ஒரு வருடம், ஒரு வருடத்தில் 21, 600 நாழிகைகள் உண்டு,
நமக்கு ஒரு நாளில் நடக்கும் சுவாசமும் 21, 600.
அது தான் சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதி. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்திலுள்ள பொன் ஓடுகளின் எண்ணிக்கை 21, 600. இந்த பொன் ஓடுகளைத் தைத்துப் பொருத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72, 000. இது எமது உடலில் உள்ள 72, 000 நாடிகளைக் குறிக்கின்றது.
360 மானுட வருடங்கள் = ஒரு தேவ வருடம்.4000 தேவ வருடங்கள் கிருத யுகம்; இதனோடு 400 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; நானூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 4800 தேவ வருடங்கள் கொண்டது கிருத யுகம்.3000 தேவ வருடங்கள் திரேதா யுகம்; இதனோடு 300 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; முன்னூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 3600 தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம். 2000 தேவ வருடங்கள் துவாபர யுகம்; இதனோடு 200 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 200 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 2400 தேவ வருடங்கள் கொண்டது துவாபர யுகம்.1000 தேவ வருடங்கள் கலி யுகம்; இதனோடு 100 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 100 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 1200 தேவ வருடங்கள் கொண்டது கலி யுகம். சிதம்பர் இரகசிய இலக்கமான
21, 600 ஐ 80 ஆல் பெருக்க வருவது கிருத யுக வருடங்கள். இது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் (17, 28, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 60 ஆல் பெருக்க வருவது திரேதா யுக வருடங்கள். இது பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்றாயிரம் (12, 96, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 40 ஆல் பெருக்க வருவது துவாபர யுக வருடங்கள். இது எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் (8, 64, 000) மானுட வருடங்கள்.
இந்த 21, 600 ஐ 20 ஆல் பெருக்க வருவது கலி யுக வருடங்கள். இது நான்கு இலட்சத்து முப்பது இரண்டாயிரம் (4, 32, 000) மானுட வருடங்கள்.
அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர் யுகம்.
பன்னீராயிரம் 12,000 தேவ வருடம்,நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் 43,20, 000 மானுட வருடங்கள் ,ஒரு சதுர் யுகம்.
சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதிதான். எல்லாக் கணக்கும்; எமது சுவாசத்தில் இருந்து அண்ட சராசரங்களின் கால எல்லை வரை, சிதம்பர இரகசியத்தில் அடங்கும்.சார்வாரி வருடம் என்பது முழுநிறைவை வழங்கும் பெயர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்