காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த ஐந்து வாரங்களில் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். கொரானாவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்திலும் கவனம் கொள்ளவேண்டும். அதைக் கவனிக்காமல் விட்டால் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 50 சதவீதப் பங்கையும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கொண்டுள்ளன. இத்துறையில் 11 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறைக்குப் போதிய ஆதரவு வழங்காவிட்டால் 6.3 கோடிக்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பைச் சந்திக்கும். ஊரடங்கு உத்தரவால் ஒவ்வொரு நாளும் இத்துறைக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. நிறுவனங்களுக்கான விற்பனை ஆர்டர்கள் எதுவும் இல்லை. பலருக்கு ஊதியமும், பலருக்கு வேலைவாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எனவே மத்திய அரசு இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இத்துறையினரைக் காப்பதோடு, பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, அரசுக்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சம்பளப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும். கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகளும் சிறு நிறுவனங்கள் துறைக்குத் தேவையான கடனுதவியை முறையாக வழங்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மூன்று மாத கால அவகாசத்தை விடக் கூடுதலான அவகாசம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட பரிந்துரைகளைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளார். அதோடு, காங்கிரஸ் கட்சி சார்பாக, கொரோனாவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்