விலை உயர்வைத் தடுக்க காய்கறி வாங்கி பரிசோதனை செய்த அலுவலர்
நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியின் செயல் அலுவலர் கு. குகன் தற்காலிக காய்கறிக் கடைகளில் மக்களோடு காய்கறி வாங்கி விலையை ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் செயல் அலுவலர் பல நடவடிக்கைகளையெடுத்து வருகிறார். அத்தியாவசிய பொருட்கள் கடைத்தெருவில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் வரவே உடன் வணிகர்கள் கூட்டம் நடத்தி கடுமையாக எச்சரித்து அன்றாட விலைப்பட்டியல் தயாரித்து பேரூராட்சி முத்திரை பெற்று வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் ஓட்டி வைத்து விற்பனை செய்ய பேரூராட்சி செயல் அலுவலர் குகன் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் மேலும் புகார் வரவே கடைகளில் சனிக்கிழமை காலை கையில் பையுடன் சென்று மக்களோடு மக்களாக ஒவ்வொரு கடையாக விலை விசாரித்து காய்கறி வாங்கினார்.
ஒரு கடையில் வெங்காயம் கூடுதல் விலைக்கு விற்பதை அறிந்து தான் செயல் அலுவலர் என அடையாள அட்டையைக் காட்டி காய்கறிகள் பறிமுதல் செய்யபோவதாக எச்சரித்தார்.
தவறை உணர்ந்த விற்பனையாளர் சரியான விலைக்கு விற்பனை செய்வதாக உறுதி அளித்ததும் விற்பனை செய்ய அனுமதி அளித்தார். இப்படி சில கடமை செய்யும் அதிகாரிகள் தானே இப்போது தேவை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்