சுகாதாரத்துறை அமைச்சகம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட நபருக்கு லேசான கொரானா பாதிப்பு அல்லது முன் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.நோயாளி தனது உடல்நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலருக்கு தவறாமல் தகவல் அளிக்க வேண்டும். அதனை கண்காணிப்பு குழுக்கள் தொடர்ச்சியாக பின் தொடர்வர்.
நோயாளியை உடனிருந்து பராமரிப்பவர் , தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரையை டாக்டரின் அறிவுறுத்தல்படி முறையாக எடுத்து கொள்ள வேண்டும்.அனைத்து சந்தேகத்திற்குரிய நபர் ( பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பவர் ), மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க ‛பிரேக் தி செயின்' அமைப்பை மருத்துவமனை நிர்வகிக்க வேண்டும்.முந்தைய வழிகாட்டுதலின்படி, கொரோனாவை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு லேசான, மிக லேசான, கடுமையாக, மிக கடுமையான பாதிப்பு உள்ளதாக என கொரோனா அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா மையம் அல்லது மருத்துவமனையில் வைத்து மருத்துவ முறைப்படி பரிசோதிக்க வேண்டும்.
மிக லேசான அல்லது முன் அறிகுறி உள்ள நோயாளிகள், தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தி கொள்வதற்கு போதிய வசதி இருப்பின், வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்தி கொள்ளலாம். உலகளாவிய ஆதாரத்தின்படி, 80 சதவீதம் பேருக்கு லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளாகின்றனர் மற்றும் மீதமுள்ள 20 சதவீதம் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே ஐ.சி.யூ சிகிச்சை தேவைப்படுகிறது. கோவிட் -19 க்கான முதன்மை சிகிச்சையானது 80 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஆதரவான சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றும் பிற மருந்துகளுடன் 15 சதவீத நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வழிகாட்டுதல்படி, கொரோனா நோயாளியை பராமரிப்பவர் வாரத்திற்கு 7 நாட்களும், 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நோயாளி வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் வரை , மருத்துவமனை உடன் பராமரிப்பவர் தகவல் தொடர்பில் இருக்க வேண்டும். இதுதவிர, மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்திருப்பதோடு, எப்போதும் வைபை அல்லது புளூடூத் மூலம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா நோயாளிக்கு மூச்சுத்திணறல், தாங்க முடியாத நெஞ்சுவலி, உதடு, முகத்தின் நீல நிறமாற்றங்கள் உருவாகுதல் , மனகுழப்பம் போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ள நோயாளிகளுக்கு அறிகுறிகள் எதுவுமில்லை என மருத்துவ ரீதியாக நிரூபணமான பின்பே, தனிமைப்படுத்துதலை முடித்து கொள்ள வேண்டும். மருத்துவ கண்காணிப்பு அதிகாரி நோய் தொற்று இல்லை என்பதை ஆய்வக முடிவுகளுக்கு பின்னரே சான்றிதழ் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்