சென்னை மாநகராட்சியில் கோவிட் -19 பாதிப்புள்ள வீடுமட்டுமே இனி முடக்கமென சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல் .
சென்னை மாநகராட்சியில் கொரானோ பாதிப்புள்ள வீடுமட்டுமே இனி முடக்கமென சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரானோ தடுப்பு பணி சிறப்பு அதிகாரியான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நேற்று ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் கொரானோவால் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை பெருநகர் மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 170 வார்டுகளில் 10க்கும் குறைவான நோய் தொற்றுப் பகுதியாகக் கண்டறியப்பட்டது. இரவு காவல்துறையினர் போலீசார் சுற்றுக்காவல் செல்லும் போது 30 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பது தெரிய வருகிறது.
பொதுமக்கள் உள்ளாடை போல் முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும். சென்னையில் கொரானோ பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முன்பு, சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மக்களின் கோரிக்கையை ஏற்று, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் வீடு மட்டும் இனி முடக்கப்படும். வெளிநாடுகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் யாருக்கும் கொரோனா தொற்றில்லை. சென்னையில் கொரானோ தடுப்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக் கூறினார்.
சென்னை பெருநகர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது:- கொரானோ தொற்று எங்கிருந்தும் பரவலாமென்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கவும், தனிமைப்படுத்திய வார்டுகளில் சிகிச்சைக்குப் பணம் கேட்பதாக கூறுவது பொய்யான தகவல். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என்றார்.
கருத்துகள்