முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுப் போக்குவரத்து சென்னை உள்பட நான்கு மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இயங்கும் அறிவிப்பு

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு முழு விபரம். வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20 சதம் பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம். 50 சதம் ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி- தமிழக அரசு. தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம். ஜூன் 8 ஆம் தேதி முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50 சதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு. பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி? கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி. தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி. நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி. நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு- தமிழக அரசு. பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை. மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை- தமிழக அரசு. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை. ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது. கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும். மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு- தமிழக அரசு. வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 சதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும் ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு. இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம். என தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகம் கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ளதால் இங்கு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஜூன் 8 ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஜூன் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும். சென்னை உள்ளிட்ட 4 வடக்கு மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு வாய்ப்பில்லை. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீத எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். அதில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஆனால் மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் பேருந்துகள் பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. போக்குவரத்தைப் பொறுத்தவரை பயணிகள், பேருந்து ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பின்பற்றவுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்காக சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.கொவிட்-19 பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி தவிர மற்ற பகுதிகளில் வாகனங்களை இயக்க யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானோ பரவல் தீவிரமான நிலையில், மறுபுறம் தளர்வுகளும் தாராளமானதையடுத்து, வெளியிடங்களுக்குச் செல்வோர் அரசிடம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம் என ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது எந்தவித பாஸ்களும் தேவையில்லை, அடையாள அட்டை இருந்தாலே போதுமானது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழகஅரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணைப்படி, கொரானோ நோய்க் கட்டுப்பாட்டு மண்டலம் தவிர ஏனைய கிராமம், தொழிற்பேட்டைகள் மற்றும் நகரப் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுததரத் தொழில்கள் உற்பத்தி துவங்க எந்தவித அனுமதியும் பெறத்தேவையில்லை, மேலும் வாகனங்கள் இயக்குவதற்கான அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை. ஆனால், பணிக்குச் செல்வோர் அவர்களது பணியில் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மாவட்டத் தொழில்மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...