தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் .
கல்லூரி நேரங்களில் விரைவில் மாற்றம். தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படுமென கல்லூரிக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் ஆண், பெண் இருபாலரும் ஒரே நேரத்தில் கல்வி பயிலும் நடைமுறையும், சில அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பல தனியார் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பகல் மற்றும் மாலைநேரம் என இரு வேளையாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பகல்நேரக் கல்லூரிகளில் மாணவர்களும்.மாலைநேரக் கல்லூரிகளில் பெரும்பாலும் மாணவிகளும் பயின்று வருகின்றனர். பகல் வகுப்புகள் தினமும் காலை 7:30 முதல் 9 மணிக்குள் ஆரம்பித்து, மதியம் 12: 30 முதல் 2 மணிக்குள் முடிகின்றன. மாலை நேர வகுப்புகள் மதியம் 12.30 முதல் 2 மணிக்கு துவங்கி மாலை 4:30 முதல் 6 மணிக்குள் முடிகின்றன.
இருசுழற்சி முறை வகுப்புகளால், பகல் நேர முறையில் பயிலும் மாணவர்கள் காலை 7:30 மணிக்கே கல்லூரிகளுக்கு வர வேண்டிய காரணமாக, நாள்தோறும் அவர்கள் காலை உணவை சரியாக சாப்பிட முடியாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாற்றாக, கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்புவரை நடைமுறையிலிருந்த ஒரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். இந்த முறையில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கும், கல்லூரி கல்வி இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளதாக தெரிகிறது. ஒரு சுழற்சி முறை வகுப்புகள், நடப்பு கல்வியாண்டில் (2020 -21) நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
கருத்துகள்