மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது. அதில் கோவிட்-19 எனும் கொரானோ வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதார பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி யின்றி தகவல் பரப்புதல் THE EPIDEMIC DISEASES ACT AND REGULATIONS பிரிவு 8 ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட வைரஸிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரிலுள்ள, ரத்னா சித்த மருத்துவமனையின் தணிக்காசலம் என்பவர் கோவிட்- 19 எனும் கொரானோ வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்ததாக ஊடக, சமூக வலைத் தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மூலம் தவறான செய்தியைப் பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ முறைகளில் சித்தமருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,யுனானி மருத்துவம்,அலோபதிக் ஆங்கில மருத்துவம் மற்றும் சீன அக்குபஞ்சர் சிகிச்சை என பல உண்டு இதில் எதிலும் வராமல் பரம்பரை மருத்துவர் என அவர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை போலவும் பழனி மலையப்பசாமி வைத்தியசாலை போலவும் இவர் பாரம்பரிய மருத்துவர் என கூறியதும் ஒரு காரணம் பாரம்பரியம் என்றால் துலாவூர் பரம்பரை நுடவைத்தியசாலை போல அதற்கும் ஒரு பாரம்பரியம் குறித்த கொடிவழிப்பட்டியல் தாத்தா தந்தை மகன் வைத்தியர்கள் என எந்த விளம்பரங்களும் அவர் செய்யாமல் தன்னிடம் மட்டுமே மருந்து உண்டு என மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை போல கூறிவந்தது ஆதாரப்பூர்வமாக இல்லை என்பதே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகிறது என பலரும் பேசும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்