சிவகங்கைப் பெண் நீதிபதி பணியிடை நீக்கம்
தமிழகத்தில் பெண் நீதிபதி ஒருவரைப் பணி இடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகப் பணியாற்றி வந்தவர் சார்பு நீதிபதி ராஜேஸ்வரி. இவர் கடந்த 2003 டிசம்பர் 10ஆம் தேதி, தமிழக நீதித்துறையில் உரிமையியல் நீதிபதியாக பணியில் நியமனம். உளுந்தூர்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம், ஆற்காடு, சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி, 2019 ஆம் ஆண்டு கோயமுத்தூரிலிருந்து சிவகங்கைக்குப் பணிமாறுதல் செய்யப்பட்டு, சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில் மே மாதம் 4 ஆம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்றத்தால் சார்பு நீதிபதி ராஜேஸ்வரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, 4.5.2020 அன்று மாலை 3.45 மணிக்குச் சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி பி.கார்த்திகேயன், சார்பு நீதிபதி ராஜேஸ்வரியிடம் நேரில் வழங்கினார்.
பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சார்பு நீதிபதி ராஜேஸ்வரி மறு உத்தரவு வரும்வரையில் கடலூரில் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முதன்மை மாவட்ட நீதிபதி பி.கார்த்திகேயன், சார்பு நீதிபதி ராஜேஸ்வரி மீது புகார் அறிக்கையை பல பக்கங்கள் கொண்ட அளவில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிய பிறகு, பணி இடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது, சிவகங்கை நீதித்துறை ஊழியர்கள்.
கொரோனா பாதிப்பு விடுமுறை பதற்றத்துக்கு மத்தியிலும் ஒரு நீதிபதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுக்க நீதித்துறையில் பரபரப்பு அவர் மீதான புகார்கள் பின்பே முழுமையாகத் தெரியவரும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்