முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட்19 பாதித்தவர்களும் பாதிப்பிலிருந்து மீன்டவர்களும் குறித்த ஒரு அரசின் விபரக்குறிப்பு

கோவிட் – 19 கூடுதல் விவரங்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விஞ்சுகின்றனர். தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குமான எண்ணிக்கை வேறுபாடு ஒரு லட்சத்தைக் கடந்தது. தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 58.56 சதவீதமாக அதிகரிப்பு. நாள் தோறும் நோய் தொற்றுக்காக நடத்தப்படும் பரிசோதனைகள் 2.3 லட்சத்தை கடந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு முன் கூட்டியே எடுத்த தரமான செயலில் உள்ள நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டுகின்றன.   நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான இடைவெளி 1,00,000 ஐ தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட 106,661 ஐ தாண்டி விட்டன. இவ்வாறு, இதுவரை மொத்தம் 3,09,712 நோயாளிகள் கோவிட் – 19இல் இருந்து குணமடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 58.56 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,832 கோவிட்-19 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.   தற்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ​​2,03,051 ஆகும். இவர்கள் அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.   பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதற்கான சான்றாக, இந்தியாவில் இப்போது கோவிட்-19 ஐ கண்டறிய 1036 ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசுத் துறையில் 749 மற்றும் 287 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. அதன் விவரங்கள் கீழே உள்ளன: நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 567 (அரசு: 362 + தனியார்: 205) ட்ரூநாட் (TrueNat) அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 382 (அரசு: 355 + தனியார்: 27) CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 87 (அரசு: 32 + தனியார்: 55) தினசரி 2,00,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 2,31,095 ஆக அதிகரித்துள்ளன. சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதியின்படி, 82,27,802 ஆகும். ஜூன் 28, 2020 நிலவரப்படி, 1055 கோவிட் மருத்துவமனைகளில் அர்பணிப்புடன் 1,57,529 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 23,168 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் 78,060 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என கோவிட் சுகாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,40,099 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 11,508 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் 51,371 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கொண்ட 2,400 கோவிட் சுகாதார மையங்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் கோவிட்-19 ஐ எதிர்த்து போராட 8,34,128 படுக்கைகள் கொண்ட 9,519 கோவிட் பராமரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு 187.43 லட்சம் N95 முகக்கவசங்கள் மற்றும் 116.99 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...