முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகை வென்றாலும் மாவீரன் ஆனாலும் உற்ற துணை தேவை

வெற்றி கைகூட. நல்ல துரோகமில்லாத நட்பு நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் மனிதர்களோ அல்லது வளர்ப்பு மிருகமோ உற்ற நண்பர்களாக இருக்கும் போது அதன் அருமை அருகாமையில் பலருக்கும் புரிவதில்லை அதை இழந்த பிறகு தான் பாதுகாத்த நிழல் தந்த அருமை விட்டு வந்த பின் வெயில் உணர்த்தும் போது புலப்படும். ஏன் தெரியுமா,நம் கையில் பலமான கேடயமும், கத்தியும் இருக்கும் வரை எதிரிகள் நம்மை நெருங்குவதில்லை எதிரிகளின் நோக்கம் நம்மிடமிருந்து அந்தக் கத்தியை பறித்து வீசவைத்து, கேடயத்தையும் வைத்திருப்பவர்களின் கைகளாலேயே அதை உடைக்க வைக்கும் அளவு தந்திரசாலிகள். அப்போது அவர்கள் நோக்கம் எளிதில் நிறைவேறும் அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் மாவீரன் அலெக்சாண்டருக்கும். உலகையே ஆண்ட மாவீரன் கிரேக்க அலெக்சாண்டர் இரத்தமும் யுத்தமும் தாய்ப்பாலில் வந்த வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல் உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகுப் பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் த. கிரேட் அலெக்ஸாண்டர் கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாசிடோனியாவில் மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்கத்தில் உதித்த அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. பிறந்த நேரத்தில் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம் தனது ராசியான குதிரை ஒலிம்பிகில் அலெக்ஸாண்டர் இந்த உலகையே ஆள்வான் என அரச ஆஸ்தான ஜோதிடர்கள் கணித்துச் சொன்னது தான் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம். பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்த போது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றம் அழைத்துச்செல்வதைப் பார்த்த அலெக்ஸாண்டர் நுழைந்தாரங்கே அந்தக் கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இளவரசரான அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா எனக் கேட்க இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்க. அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் அல்லது தன் மீது நம்பும் ஒரு நல்ல மனிதனுக்காக இருக்க வேண்டும். என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார். அலெக்ஸாண்டர் நீதிபதிக்கே நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது ஏழு புத்திக்கூர்மையைக் கூற வேறு ஒரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்தக் குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் அவருக்கு வேண்டிய ஒருவரால் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரடசியால் என்ப் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையின் மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர். மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிக் காலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது. உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிஞர்களில் ஒருவரான அரிஸ்டாடிலை தனது 13 ஆவது வயதில் ஆசிரியராக பெற்றார்..நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்கள் தவம் செய்ய வேண்டும் உவேசா வுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளை போலவும், ராமானுசருக்கு திருக்கோஸ்டியூர் நம்பி போலவும் அலெக்ஸாண்டரிடம் என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் கேட்க அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ள தென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறி மாணவரானார். ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதை கவனித்த அரிஸ்டாடில் நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார். பொது ஆண்டு 336 ல் மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது இருபது வயதில் அரியனை ஏறிய அலெக்ஸாண்டர். அடுத்த பதிமூன்று ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவனம் ஒன்று சேராத பாரதநாட்டின் ஒரு சில மன்னர்கள் மீது திரும்பியது. சிந்துச் சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் போரஸ் என்ற புருஷோத்தமனை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் பின் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று கூற உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்துப் அதனை மாசிடோனியாவின் பாதுகாப்புக்கு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர். இந்த கால கட்டத்தில் தான் அவரின் வெற்றிகளுக்கெல்லாம் உறுதுனையாக இருந்த ஃபுஸிபேலஸ் எனும் குதிரை இறந்து போனது. அந்த துக்கத்தில் ஒருவாரம் உணவே இல்லாமல் அலெக்ஸாண்டர் துவண்டு கிடந்ததாகவும் ஒரு குறிப்புக் கூறுகிறது. அதன் பின்னரும் சில வெற்றிகளைக் குவித்தார் அலெக்ஸாண்டர். 5 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட களைப்பிலும் 12 ஆயிரம் மைல்கள் கடந்து வந்த சோர்விலும் அடுத்து ஒரு படி அடியெடுத்து வைக்கமாட்டோம் என்றனர் அவரது படை வீரர்கள். தன் படையின் பலமே தனது பலம் என்பதை உணர்ந்த அலெக்ஸாண்டர் தனது இலக்குகளை சுருக்கிக் கொண்டு பாபிலோன் நகர் திரும்புமாறு படைக்கு உத்தரவிட்டுத் பாபிலோன் திரும்பிய சில நாட்களில் ஒரு மாபெரும் விருந்தில் கலந்துகொண்ட அலெக்ஸாண்டர். அந்த விருந்து நடந்த மூன்றாம் நாள் பொது ஆண்டு 323 ஜூன் 10 ஆம் தேதி தனது 33 ஆவது வயதில் காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர் கலந்து கொண்ட விருந்தில் அவரது ஏதிரிகளால் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின. அவர் உண்மையிலேயே விஷத்தால் தான் மாண்டாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற முடியவிட்டாலும் இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிஞர் ஒருவர் அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும் வீரர்களையும் கன்னியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப் போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது விவேகம் புகழை தந்தது வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால்தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும். அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும். மேலும் உடனிருந்து நல்ல நண்பர்களை பிரிந்து அதன் பின்தான் மாவீரன் நெப்போலியன் ,மாவீரன் அலெக்சாண்டர் ஆகியோரை அவரது எதிரிகளால் வெல்ல முடிந்தது. உற்ற நண்பர்கள் உடனிருந்த வரை அது நடக்கவில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...