ஐடிபிஐ வங்கிக்கு ஐநூற்றி எட்டுக் கோடிக்கு மேல் கட்டும்படி ஸ்பிக் ஏ.சி.முத்தையாவுக்கு பொது அறிவிப்பு வெளியீடு
ரூபாய் .274 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி செய்ததாக பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவரும் ஸ்பிக் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரருமான காநாடுகாத்தான் ஏ.சி., முத்தையா உள்ளிட்ட. எட்டு நபர்கள் மீது சி.பி.ஐ சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளதில் ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு ரூ.274 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், கூட்டுச்சதி போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் பணம் பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு தொடர்பாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்தனர் ரூபாய் 274 கோடி வங்கி மோசடி புகாருக்கு தொழிலதிபரான ஏ.சி முத்தையா அப்போது மறுப்பு தெரிவித்தாலும் குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக பல்டியடித்துத் தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா அப்போது கூறிய நிலையில் 274 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.டி.பி.ஐ. வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட எட்டு நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபர்ஸ்...