முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மறு அளவீடு கோரி விண்ணப்பம் செய்கின்றனர். அதோடு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தகப்பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் படங்கள், கிராம வரைபடம் ஆகியவை தரப்படுகிறது. இதற்காக நில அளவைத்துறை சார்பில் விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை உயர்த்த நில அளவைத்துறை முடிவு செய்ததன் பேரில் மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் தலைமையில் ஆலேசானைக்குழு அமைக்கப்பட்டு அக் குழு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும்  கிராம வரைபடங்களின் கட்டணம், உட்பிரிவு, புல எல்லை பட்டா மாறுதல் அமைத்தல், புலப்பட நகல் வழங்குதல் உள்ளிட்டவைக்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்தது. இதற்கான கட்டணத்தை  உயர்த்தி வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா இ ஆ ப உத்தரவிட்டுள்ளபடி புல அளவீட்டு புத்தகப் பிரதி ஏ4 அளவு ரூபாய்.20லிருந்து 50 ஆகவும், ஏ3 அளவு ரூபாய்.100 ஆகவும், புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூபாய்.20லிருந்து 200 ஆகவும், கோணமானியைப் பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதல் ரூபாய்.30லிருந்து 300 ஆகவும்,  நில அளவரின்  முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூபாய் 50லிருந்து 400 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புஞ்சை நிலம் ரூபாய் 30லிருந்து 1000 ஆகவும், நஞ்சை நிலம் ரூபாய்50லிருந்து இரண்டாயிரமாகவும், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புஞ்சை நிலம் ரூபாய் 60லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆகவும், நஞ்சை நிலம் ரூபாய் 60 லிருந்து நான்காயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நில அளவைக் குறியீட்டின் தொகை செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆகவும், மாவட்ட வரைபடம் (கலர்) ரூபாய் 189 லிருந்து 500 ஆகவும், மாவட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூபாய் 51லிருந்து 300 ஆகவும், வட்ட வரைபடம் ரூபாய் 357 லிருந்து 1000 ஆகவும், வட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூபாய் 51லிருந்து 500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூபாய் 27லிருந்து 50 ஆகவும், கிராம வரைபடம் ரூபாய் சீட் ஒன்று 85 லிருந்து 200 ஆகவும், உட்பிரிவுக் கட்டணம் கிராமப்புறத்தில் ரூபாய் 40 லிருந்து 400 ஆகவும், நகராட்சிப் பகுதிகளில் ரூபாய் 50 லிருந்து ரூ500 ஆகவும்,  மாநகராட்சிகளில் ரூபாய் 60 லிருந்து 600 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தகஹ கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறதென்று கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் செல்வராஜ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதில், நில அளவைப் பணிகள் சார்ந்த பணிகளுக்கான பயனாளர் கட்டணங்களை உயர்த்தி அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுரை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்துத் தொழில்களும் பாதித்த நிலையில் பல மடங்கு மின்சாரக் கட்டணத்தால் பொதுமக்கள் பாதிப்புள்ள நிலையில் நில அளவைக் கட்டணமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசுக்கு விவசாயிகள் அனுப்பிய மனுவில் நில அளவைக் கட்டணம், உட்பிரிவுக் கட்டணம், வரைபட கட்டணம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில், வருவாயின்றி மக்கள் தவிக்கும் நிலையில், இதுபோன்ற கட்டண உயர்வுகளை அறிவிப்பது விவசாயிகள், பொதுமக்களை சிரமப்படுத்துவதாகும்.பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல்களுக்கு பத்திரம் பதிவு செய்யும் போதே, அதற்கான கட்டணம் செலுத்தி இருந்தாலும், வருவாய்த்துறையில் பட்டா மாறுதல் செய்வது இல்லை. மீண்டும் அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான கட்டணமும் செலுத்த வேண்டியதுள்ளது.கிராம அளவில் ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், நில அளவீடு செய்து தர 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் பணிகள் இழுபறியாக உள்ளது. இதனால் பல அலுவலகங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, நில அளவை தொடர்பான கட்டண உயர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் நமது தமிழகத்தில் வருவாய்த்துறை பத்திரப்பதிவுத்துறை நில அளவைத்துறை இடையே சங்கிலித்தொடர் இணைப்பு இல்லாத நிலையில் தான் பட்டா மாறுதல் செய்வதில் கூட ஊழல் மலிந்துள்ளது . அதைத் தடுக்க இப்போது கட்டணம் உயர்வு தேவை இல்லை என விவசாயிகளின் கோரிக்கையாகும். நில நிர்வாகத் துறை சார்பில் வருவாய் வரி நிர்வாகம் செய்ய ரயத்துக்களின் நிலங்களில் பாதுகாப்புக் கருதி அச்சிட்ட அடங்கல் கணக்கு அரசின் 13 பப்ளிக்கேசன் 19 பி நோட்டிபிகேசன் செய்த அளவீட்டு ஆவணம் உண்டு அதில் சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு விபரம் முக்கியமானது சர்வேயை இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது. அவை 1. நில அளவை துறை 2. நில வரிதிட்ட துறையாகும் 2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவைத் துறையினால் தயாரிக்கப்படுகிறது. 3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது. 4. மாநில அரசின் நில அளவைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலைக் கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது. 5. 1. கிராம வரைபடம், 2. D ஸ்கேட்ச் ( நஞ்சை, புஞ்சை ரயத்துவாரி, மானாவாரி,தரிசு, கிராம நத்தம், அரசுப் புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்) 3. புலப்படம் 4.சர்வே கற்கள் பதிவேடு 5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவைச் சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும். 6. ஒவ்வொரு நில உரிமையாளரிண் புல எல்கை சர்வே செய்து போடப்பட்ட கற்கள் உண்டு எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரருடனான கூட்டுப் பொறுப்பாகும். 7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கிக்காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்குப் பயன்படும். ஒவ்வொரு 30 ஆண்டு முடிவில் நிலத்தில் சர்வே நடக்கும் மேலும் 1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது. 2. பிறகு நத்தம் நிலவரி திட்டம் UDR செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது. 3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும். 4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும் 5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும். 6. நிலத்தை அரசு ஆர்ஜித நடவடிக்கை செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது. 7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது படிவம் 14 மற்றும் 15 தயாரிக்கும் போதும் 8. பராமரிப்புப் பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும். 9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும். சர்வே புல வரைப்படத்தில் 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர். 6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள். 7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி … நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் மூன்று அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. 1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா, 2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை 3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ் பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு பழக்கவழக்கங்கள் இருக்கிறது. பிரிட்டிஸ் கிழக்கிந்திய நிர்வாக ஆட்சியில் நில நிர்வாகத்தை 90 சதம் அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம். • இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது. கொங்குப் பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது. நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன. வேலி • • 1வேலி – 2௦ மா • 1வேலி – 6.17 ஏக்கர் • 1வேலி – 5காணி மா • • 1மா – 1௦௦ குழி • 2௦மா – 1வேலி • 3மா – 1ஏக்கர் • 3மா – 1௦௦ சென்ட் • 7மா – 1ஹெக்டேர் சதுமீட்டர் • • 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர் • 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர் • 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட் • 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட் • 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி • ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி • 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ் • ௦.8361 சதுர மீட்டர் – 1குழி • 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி செயின் • 1செயின் – 66அடி • 1செயின் – 1௦௦ லிங்க் • 1௦செயின் – 1 பர்லாங்கு • 1செயின் – 22 கெஜம் ஏக்கர் • 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள் • 1ஏக்கர் – 1௦௦ சென்ட் • 1ஏக்கர் – 16௦ square Roads • 1ஏக்கர் – 1.1834 Square Arpents • 1ஏக்கர் – 1௦ Square Chains • 1ஏக்கர் – 16௦ Perches • 1ஏக்கர் – 16௦ Poles • 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர் • 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர் • 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர் • 1.32ஏக்கர் – 1 காணி • 64௦ஏக்கர் – 1 சதுர மைல் • 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ் • 6.17ஏக்கர் – 1 வேலி • 1ஏக்கர் – 3 மா • 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர் • 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ் • 1ஏக்கர் – 4840 சதுர கெஜம் • 64௦ ஏக்கர் – 1 சதுர மைல் • 8.64ஏக்கர் – 1வள்ளம் கெஜம் • 1கெஜம் – 3அடி • 22கெஜம் – 1 செயின் • 22கெஜம் – 66 அடி • 1கெஜம் – ௦.9144 மீட்டர் • 1.௦93613 – 1மீட்டர் ஏர்ஸ் • 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட் • 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி • 1ஏர்ஸ் – 2. 47 சென்ட் • 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ • 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர் • ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட் ஹெக்டேர் • 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட் • 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ • 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ் • ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட் • 1ஹெக்டேர் – 247 சென்ட் • 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள் • ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர் சென்ட் • 1சென்ட் – 435.சதுரஅடிகள் • 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர் • 1சென்ட் – 3குழி • 1சென்ட் – 48.4 சதுர குழி • 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி • 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர் • 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ் • 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர் • 2. 47 சென்ட் – 1ஏர்ஸ் • 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ் • 5.5 சென்ட் – 1கிரவுன்ட் • 1.5 சென்ட் – டிசிமல் • 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர் • 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர் • ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ் • ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ் • 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள் • 5.5 சென்ட் – 1 மனை • 33.௦6சென்ட் – 1 மா • 6.61 சென்ட் – 1 வேலி • ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை) • ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை ) சென்ட் • 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள் • 11.௦ சென்ட் – 2மனை • 56 சென்ட் – 1குருக்கம் • 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள் • 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள் • 4.7 சென்ட் – 1வீசம் கிரவுண்ட் • 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர் • 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள் • 1கிரவுண்ட் – 5.5 சென்ட் மீட்டர் • 1 மீட்டர் – 3.281 அடிகள் • 161௦ மீட்டர் – 1 மைல் • 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ • 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல் • ௦.9144 மீட்டர் – 1 கெஜம் • 1 மீட்டர் – 39.39 இஞ்ச் • 2௦1.16 மீ – 8 பர்லாங்கு • 1 மீட்டர் – 1.௦93613 கெஜம் • ௦.3௦48 – 1அடி • 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள் அடி சதுர அடிகள் • 435.6 சதுர அடிகள் 1சென்ட் • 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட் • 57,6௦௦ சதுர அடிகள் 1காணி • 3.28 அடி 1மீட்டர் • 1அடி 12 இன்ச் • 1அடி 3௦. 48 செ. மீ • 528௦ அடி 1 மைல் • 328௦ அடி 1கி. மீ • 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ் • 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர் • 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர் • 24௦௦ சதுர அடிகள் 1 மனை • 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம் • 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர் • 1 சதுர அடி 144 சதுர அங்குலம் • 1௦89 சதுர அடிகள் 33 அடி • 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர் • 33 அடி 1 குந்தா • 66௦ அடி 1 பர்லாங்கு • 66௦ அடி 22௦ கெஜம் • 66 அடி 1 செயின் • 66 அடி 1௦௦ லிங்க் • ௦.66 அடி 1 லிங்க் • ௦.66 அடி 7.92 அங்குலம் • 3 அடி 1 கெஜம் • 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட் • 66 அடி 22 கெஜம் • 3.28 அடி 1.௦93613 கெஜம் • 1 அடி ௦.3048 மீட்டர் • 3.28௦84 அடி 1 மீட்டர் • 32. 8௦84 1௦ மீட்டர் • 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர் • 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர் • 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர் • 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர் • 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர் • 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ • 215.278 2௦சதுர மீட்டர் • 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர் • 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட் • 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி • 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும் • 144 சதுர அடிகள் 1குழி என கணக்கிடப்படுகிறது. தற்போது கட்டணம் கூடியதில் விவசாயிகள் பாடுத்தான் கவலையானதாகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...