முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் நேரத்தில் ஜாதியை முன்னெடுக்கும் பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு நாளை போராட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு மடல் என் உயிரினும் மேலான பாட்டாளிச் சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு புலியென புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் சிங்கக் குட்டிகளாகிய நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள். சமூகநீதி போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவு கட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது. அப்போராட்டத்தின் வடிவமும், போராட்ட தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை; அது இங்கு ஒரு பொருட்டுமல்ல. ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்; நமது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நேற்று மாலை 6.00 மணிக்கு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆம். பாட்டாளி சொந்தங்களால் வளர்க்கப்படும், வழிகாட்டப்படும் தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோருடன் நேற்று நடத்திய உரையாடலும், அவர்களிடத்தில் நான் கண்ட உறுதியும், உணர்வும் தான் எனக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அந்த நம்பிக்கை பொய்க்காது. தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், இளம்பெண்களுடனான இணையவழி உரையாடல் மிகக்குறுகிய காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. அதிகபட்சமாக இரு நாட்கள் கூட அவகாசம் இல்லை. அதிகபட்சமாக 20,000 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், எனது கணக்கை தப்பாக்கி, 50,000-க்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் இணைய வழியில் குவிந்து விட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் உளமாறத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக பொதுக்கூட்டங்களோ, மாநாடுகளோ நடத்தும் போது பார்வையாளர்களுடன் தலைவர்கள் நேரடியாக பேசுவார்கள். அப்போது பார்வையாளர்களின் கண்களில் பிரகாசத்தையும், மனம் முழுவதும் பரவசத்தையும் பார்க்க முடியும். அது இயல்பானது தான். ஆனால், நேற்று நடைபெற்றது இணையவழி கூட்டம் தான். இத்தகைய கூட்டங்களில் உரையாற்றுபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே உணர்வு வழி உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், கூட்டத்தில் உரையாற்றும் போது பார்வையாளர்களின் கண்களைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். அவர்களின் கண்களில் சூரியனை விஞ்சும் அளவுக்கு பிரகாசம் தென்பட்டது; அவர்களின் மனதில் காவிரி வெள்ளத்தை விஞ்சும் அளவுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. இவை அனைத்துக்கும் மேலாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்காக நாம் சமரசமின்றி போராட வேண்டியதன் தேவை குறித்தும் வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள் கூட புரிந்து கொண்டுள்ளனர். இப்புரிதலும், உணர்வும் மட்டுமே நமது போராட்டம் வெல்ல போதுமானவ.. இப்போது என்ன கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோமோ, அதே கோரிக்கையை முன்வைத்து 1987-ஆம் ஆண்டு நாம் நடத்திய ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, வரப்புகளிலும், முள் பாதைகளிலும் நடந்து சென்று போராட்டத்திற்கு மக்களை தயார் செய்தேன். ஆனால், இப்போது ஒரு சில வாரங்களிலேயே அதை விட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதற்குக் காரணம் நாம் முன் வைத்துள்ள கோரிக்கையில் உள்ள நியாயம் தான். அதனால் தான் சொல்கிறேன்.... வன்னியர்களுக்கு 20 சதம் இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி. சமூகநீதி அளவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்று ஒன்று இருந்தால் அது வன்னியர் சமுதாயம் தான். விவசாயியாக, கட்டுமானத் தொழிலாளர்களாக, நாட்டைக் காக்கும் பணியில் பாதுகாவலர்களாக, ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்களாக வன்னியர் சமுதாயம் இருந்தாலும் கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டும் இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அந்த நிலையை மாற்றி சமூகநீதி என்ற கனியை வன்னியர்களும் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த உண்மையை நாமும் உணர்ந்து கொண்டு, மற்ற சமுதாயங்களுக்கும் புரிய வைத்திருக்கிறோம். சென்னையில் நாளை முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நாம் நமது உரிமைக்காகவே போராடுகிறோம்; எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில் நமது கோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது. அதற்கெல்லாம் மேலாக எனக்கு மிகவும் முக்கியம் உங்களின் பாதுகாப்பு தான். எனவே, அனைத்து பாட்டாளிகளும் மிகவும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும்; இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள நேரங்களில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்; அவ்வப்போது கைகளை கிருமிநாசினியால் தூய்மை செய்ய வேண்டும். உண்மையாகவும், உரிமைக்காகவும் போராடும் நமக்கு எப்போதும் வெற்றி தான். எனவே, சமூகநீதிக்காக உறுதியாக போராடுவோம்; இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம். சென்று வா... வென்று வா! எனவும் கோரிக்கை மடல் வழி அழைப்பு விடுத்துள்ளார் இதேநிலையை இனி அனைத்து சமுதாயத்தில் இருக்கும் தலைவர்கள் பின்பற்றினால் தமிழகத்தில் தினசரி போராட்டம் தான் நடக்கும் ஏல்லா ஜாதிகளுக்கும் உணர்வு உண்டு அதை முதலில் தட்டி செல்வது அரசியலுக்காக பாமக தான். முதலில் .இட ஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையா சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது! கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பிரிவு 1 & 4%, பிரிவு 2ஏ &15%, பிரிவு 2 பி & 4%, பிரிவு 3ஏ &4%, பிரிவு 3பி & 5% என 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சமூகங்களும் பயனடைகின்றன. கேரளத்தில் ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என பி.சி ஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 2 பிரிவுகளாக மட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எனது தலைமையில் வன்னியர் சங்கம் தீவிரமாக போராட்டம் நடத்திய பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இரண்டாவது பிரிவு ஏற்படுத்தப்பட்டது! தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம் அதன் பரிந்துரைகளில்,‘‘தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ள பிரதிநிதித்துவம் என்பது அவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கோ அல்லது அவரவரின் மக்கள்தொகைக்கோ சற்றும் பொருத்தமில்லாத அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை ஒன்றாக இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆணையம் பரிந்துரைத்தவாறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 33% ஆக அதிகரிக்கப்படும் போது அதை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% என்ற அளவில் பிரித்து வழங்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருந்தது. ஆனால், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை குப்பைத்தொட்டியில் வீசி, வன்னியர்களுக்கு புதிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுத்தார் கலைஞர் கருணாநிதி சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 8% அல்லது 15% உயர்த்தி 33% அல்லது 40% ஆக ஆக்க கலைஞர் கருணாநிதி மறுத்து விட்டார். மாறாக, இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 6% அதிகரித்து 31% ஆக உயர்த்தினார். அதே நேரத்தில் பொதுப்போட்டிக்கான பிரிவில் இருந்த 15 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து சேர்த்தார். இந்த சாதிகளின் மக்கள்தொகை, 6 விழுக்காட்டை விட பல மடங்கு அதிகம். சமூகத்திலும், கல்வியிலும் வலிமையாக இருந்த இந்த சாதிகள் வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாய்ப்புகளை பறித்தன. இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் துரோகம். 1954-ஆம் ஆண்டில் காமராசர் ஆட்சியில் வன்னியர்கள் உள்ளிட்ட 39 சமுதாயங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு கல்வியிலோ, அரசு வேலையிலோ இட ஒதுக்கீடு கிடையாது. மாறாக 92 எம்.இ.ஆர் சென்னை மாகாண கல்வி விதிகளின் 92-ஆவது 😳 பிரிவின்படி கல்விக்கட்டணத்தில் பாதி செலுத்தினால் போதும் என்ற ஒரு சலுகை மட்டும் தான் வழங்கப்பட்டது. ஆனால், 1972-ஆம் ஆண்டில் அந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையே கலைஞர் கருணாநிதி நீக்கி விட்டார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் தீவிரமாக போராடியதைத் தொடர்ந்து, அதுகுறித்து முடிவெடுப்பதற்காக 12.12.1988-இல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அப்போதைய ஆளுனர் பி.சி. அலெக்சாண்டர் அரசாணை பிறப்பித்திருந்தார். 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி பிப்ரவரியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தார். அதன்மூலம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைப்பதை முற்றிலுமாக கலைஞர் தடுத்தார். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கோரி தான் வன்னியர் சங்கம் போராடியது. ஆனால், கலைஞரோ 107 சாதிகளுடன் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்தார். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், வன்னியர்களுக்கு இப்போது தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 27 சமுதாயங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் கலைஞரை சந்தித்து வலியுறுத்தினேன்; கலைஞர் கருணாநிதியும் ஒப்புக்கொண்டார். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் ஏமாற்றினார். என்பதை நினைவு படுத்திப்பதிவிட்டுள்ளார் பா ம க நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...