நிதி அமைச்சகம் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளோர் மீது வருமான வரித்துறை
புதுதில்லியில் தேடுதல் நடவடிக்கை
ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் தொடர்பான இடங்களில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டது.
தில்லி பகுதியில் கணக்கில் வராத பணத்தைக் கையாளும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், போலி நிறுவனங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிறுவனங்களின் மூலம் போலி ரசீதுகள் மற்றும் இதர கோப்புகளை உருவாக்கி கணக்கில் வராத பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளின் மூலம் பரிவர்த்தனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
ரூபாய்.300 கோடிக்கும் அதிகமான மோசடி கண்டறியப்பட்டு, ரூ.14 கோடி பணமும், ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கமும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள்