முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல்நிலையை முன்வைத்து, அரசியலுக்கு வர இயலாத காரணம் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை




 உடல்நிலையை முன்வைத்து, அரசியலுக்கு வர இயலாத  காரணம் நடிகர்  ரஜினிகாந்த்  அறிக்கை. ரஜினிகாந்த். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது படப்பிடிப்புத் தளத்தில் நான்கு  நபருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் நடிகர் 

ரஜினிகாந்த்துக்கு கொரானா நெகடிவ் ஆனது ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டபின். திடீரென்று இரத்த அழுத்த மாறுதல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதன செய்யப்பட்டதில் பயப்பட ஏதுமில்லை எனவே சென்னை திரும்பினார். மருத்துவர்கள் சில விபரங்கள் அறிவுறுத்தியததனால்,  அரசியலுக்கு வருவாரா எனற சந்தேகம் வலுத்தது. தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் :

"என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌  கொண்ட படக்‌ குழுவினருக்கு தினமும்‌ கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்‌.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர்‌ படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும்‌ கரோனா பரிசோதனை செய்வித்தார்‌. எனக்கு கரோனா நெகடிவ்‌ வந்தது. ஆனால்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ அதிக ஏற்றத்‌ தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு ரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌. ஆகையால்‌ என்னுடைய மருத்துவர்களின்‌ அறிவுரைப்படி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேரிட்டது.

என்‌ உடல்நிலை ௧ருதி தயாரிப்பாளர்‌ கலாநிதி மாறன்‌ அவர்கள்‌ மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார்‌. இதனால்‌ பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய்‌ நஷ்டம்‌. இவை அனைத்துக்கும்‌ காரணம்‌ என்னுடைய உடல்‌ நிலை. இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான்‌ பார்க்கிறேன்‌.

நான்‌ கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல்‌ அனுபவம்‌ வாய்ந்த யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌.

நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன்‌ லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்‌. 120 பேர்‌ கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ மருத்துவர்களின்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய்‌ எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்‌ Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும்‌ நான்‌, இந்த கரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்‌ போது என்‌ உடல்நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ சங்கடங்களையும்‌ எதிர்கொண்டு, மனரீதியாகவும்‌ பொருளாதார ரீதியாகவும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்‌.

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌.

இந்த முடிவு ரஜினி மக்கள்‌ மன்றத்தினருக்கும்‌, நான்‌ கட்‌சி ஆரம்பிப்பேன்‌ என்று எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌.

மக்கள்‌ மன்றத்தினர்‌ கடந்த மூன்று ஆண்டுகளாக என்‌ சொல்லுக்குக்‌ கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும்‌, நேர்மையுடனும்‌ கரோனா காலத்திலும்‌ தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்‌திருக்கின்றீர்கள், அது வீண்‌ போகாது. அந்த புண்ணியம்‌ என்றும்‌ உங்களையும்‌ உங்கள்‌ குடும்பத்தையும்‌ காப்பாற்றும்‌.

கடந்த நவம்பர்‌ 30 ஆம்‌ தேதி நான்‌ உங்களைச் சந்தித்த போது, நீங்கள்‌ எல்லோரும்‌ ஒரு மனதாக 'உங்கள்‌ உடல்‌ நலம்‌ தான்‌ எங்களுக்கு முக்கியம்‌, நீங்கள்‌ என்ன முடிவெடுத்தாலும்‌ எங்களுக்குச் சம்மதமே' என்று சொன்ன வார்த்தைகளை என்‌ வாழ்நாளில்‌ மறக்கமாட்டேன்‌. நீங்கள்‌ என்மேல்‌ வைத்திருக்கும்‌ அன்பிற்கும்‌, பாசத்திற்கும்‌ தலை வணங்குகிறேன்‌. ரஜினி மக்கள்‌ மன்றம்‌ என்றும்‌ போலச் செயல்படும்‌.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள்‌ வந்தாலும்‌ தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில்‌ உங்க உடல்‌ நலத்தை கவனியுங்க, அதுதான்‌ எங்களுக்கு முக்‌கியம்‌ என்று அன்புடன்‌ கூறிய தமிழருவி மணியன்‌ ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ கேட்டுக்‌ கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில்‌ பொறுப்பான பதவியிலிருந்து விலகி என்‌ கூட வந்து பணியாற்றச் சம்மதித்த அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும்‌ நன்றி கூற நான்‌ கடமைப்பட்டுள்ளேன்‌.

தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான்‌ செய்வேன்‌. நான்‌ உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும்‌, வெளிப்படைத் தன்மையையும்‌ விரும்பும்‌, என்‌ நலத்தில்‌ அக்கறையுள்ள, என்மேல்‌ அன்பு கொண்ட என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான ரசிகர்களும்‌, தமிழக மக்களும்‌ என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்.‌"

இவ்வாறு ரஜினி பதிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...