பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 50 சதவித பார்வையாளர்கள், 50 சதவீத மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதில் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, ஒரு காளைமாடுடன் அதன் உரிமையாளர், ஒரு பராமரிப்பாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைமாடுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனைசெய்து நெகட்டிவ் எனச் சான்று பெற வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மாடு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 300 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ளலாம். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் ஏழு நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். போட்டிகளைக் காண 50 சதவீதம் பார்வையாளர்களே..? அனுமதிக்கப்படுவர். அதேபோல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் ஏற்பாடுகளும் கிராமக் கமிட்டிகளால் சுறுசுறுப்படைந்து உள்ளன.

கருத்துகள்