தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம்
1993 ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு, அணைத்து மாநிலத்திலும் மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்படுத்தி
மனித உரிமை மீறலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்ய ஆணையத்தால் முடியும். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழகத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் வரை பதவி வகுப்பார்.
மனித உரிமை ஆணைய தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, மாநில அதிகாரத்தின் படி உருவாக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரிவு 12-ன்படி அதன் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றநீதிபதி எஸ்.பாஸ்கரன் மூன்று வருட காலத்திற்கு அல்லது 70 வயதை எட்டும் வரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்