நிதி அமைச்சகம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு
சீர்திருத்தங்களை நிறைவேற்றிய 5வது மாநிலம் ராஜஸ்தான்
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, கொண்டு வந்த நகர்ப்புற உள்ளாட்சி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 5வது மாநிலமாக ராஜஸ்தான் இணைந்துள்ளது. இதனால், சீர்திருத்தம் தொடர்பான கூடுதல் கடன் பெறுவதற்கு ராஜஸ்தான் தகுதி பெற்றுள்ளது. வெளிச்சந்தையில் ராஜஸ்தான், ரூ.2,731 கோடி கூடுதலாக கடன் பெற, செலவினத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், தெலங்கானா ஆகியவை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதன் காரணமாக இந்த 5 மாநிலங்களும் மொத்தம் ரூ.10,212 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கு சிறப்பான பொது சுகாதார சேவைகளையும் வழங்குவதற்காக இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பொருளாதார ரீதியாக புத்துயிர் பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், நல்ல உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும்.
கருத்துகள்