"அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண் பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால் இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார்.
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய் பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும். தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல் இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சமூகம் காலகாலமாய் பலயுகமாய்க் கொண்டாடி மகிழ்கிறது.தைப் பிறப்பும் பின் வந்த மகர சங்கராந்தியும்
தைப் பொங்கலோடு மகர சங்கராந்தியும் பேசப்படும் காலம் சங்ககாலம் கடந்தபின்காலம் தான். பாமரர்களுக்கு அது அந்நியமான சொல்போல வைதிகம் சார்ந்ததாக சிலர் பார்ப்பார்கள். ஆனால், மகர சங்கராந்திக்கு வானியல் தொடர்பு உண்டு. தை மாதப் பிறப்புக்கும்கூட.
இவற்றிடையே வானியல் அடிப்படையில் தை மாதப் பிறப்புக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. சூரியனின் சுற்றுப்பாதையை நோக்கி பூமி 22.5 பாகை சாய்ந்திருப்பதன் காரணமாக நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே 22.5 பாகையிலுள்ள கடக ரேகைக்குச் சித்திரை முதல் ஆனி மாதம் முடிய சூரியன் பயணிக்கிறது. பின் ஆடி மாதத்தில் தெற்கு நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறது. அது தட்சணாயனம் எனப்படும். புரட்டாசி இறுதியில் மீண்டும் நிலநடுக்கோட்டுக்கு நேராக வருகிறது. ஐப்பசி தொடங்கி மார்கழிவரை தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கே 22.5 பாகையில் உள்ள மகரரேகைக்கு நேராகச் சூரியன் வருகிறது.
தை ஒன்றாம் தேதி வடக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது. இது உத்தராயனம் எனப்படும். இப்பயணம் பங்குனி கடைசியில் மீண்டும் நிலநடுக்கோட்டை அடைவதாக முடியும். சித்திரை, ஐப்பசிகளில் முதல் நாள் பகல்-இரவு சமமாக (அதாவது 12 – 12 மணி நேரமாக) இருக்கும். அவற்றை ‘விசு’ என்போம் (அயனம் – இயக்கம், தட்சணம் – தெற்கு , உத்தரம் – மேலே, வடக்கு).
நிலநடுக் கோட்டை ஒட்டியுள்ள நம் தென் நிலப்பரப்பில் பூவும் கனியும் தானியங்களும் செழித்துக் குலுங்கும் வசந்தத்தை நோக்கிய நகர்வு என்ற வகையில், தைப் பிறப்பு முக்கியமான நாள். நம் விளைச்சல் பயன்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகச் சூரியனுக்குப் பொங்கலிடுகிறோம். நிலங்களை உழவு செய்த மாடுகளுக்கும் சிறப்புச் செய்கிறோம். தொடர்ந்து காலகட்டங்களுக்குத் தகுந்த களியாட்டங்களில் ஈடுபடுகிற நிலை
காலக்கணக்கு – சந்திர அடிமானம், சூரிய அடிமானம்
சித்திரை தொடங்கி பங்குனி முடிய உள்ள 12 மாதங்களும் பழந்தமிழர் பின்பற்றிய தமிழ் மாதங்களே. ஆனால், சந்திர அடிமானமாக அமைந்த ஆண்டுக்கணக்கில் திங்கள் என்று மாதங்கள் அழைக்கப்பட்டன (திங்கள் – சந்திரன்). தொல்காப்பியம் தொடங்கி சங்க நூல்கள் பேசும் நாளும் திங்களும், நட்சத்திரத்தையும் மாதத்தையும் குறிக்கும்.
ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் சந்திரன் அசுவினி தொடங்கி ரேவதி முடிய 27 நட்சத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு நகர்கின்றன. அந்நாள், அந்நட்சத்திரத்தால் அறியப்பட்டது. இன்றிருப்பது போல 1, 2, 3… என்று தேதிகள் கிடையாது. பவுர்ணமி கழிந்து 14 தேய்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி எனத் திதிகளாக அறியப்படும். அந்தத் தேய்பிறை 14 நாட்கள் கிருஷ்ண பட்சம்/ பகுள பட்சம் அல்லது அமர பட்சம் என அழைக்கப்படுகிறது. 15 ஆம் நாள் அம்மாவாசை. அதை அடுத்த 14 வளர்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி என வரும் 14 நாட்கள் அல்லது திதிகள் சுக்ல பட்சம் என அழைக்கப்படுகின்றன. திதிதான் தேதி ஆயிற்று. இவ்வாறு சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திர அடிமான மாதமான திங்கள் அமைகிறது. இதில் சூரியனுக்குக் பங்கில்லை. பழந்தமிழகத்தில் மாதக் கடைசி நாள் பௌர்ணமி அல்லது பூர்ணிமா மாதம். இதுபோல அமாவாசை இறுதி நாளாகக் கொண்ட காலக் கணக்குகளும் உண்டு. காலம் வகுத்த தமிழ்க்குடியின் தலைமை விழா பொங்கல் . வாழ்த்துக்களை உரித்தாக்கும்.. பப்ளிக ஜஸ்டிஸ்
கருத்துகள்