'மதுரைச் சங்கம் வைத்து மாபாரதம் தமிழ்படித்து' என சின்னமனூர்ச் செப்புப்பட்டயம் கூறும் கூடல் மாநகர் மாமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் தை தெப்ப உற்சவம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் தை தெப்ப உற்சவம்
தை மாதத் தெப்பத்திருவிழா ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் ஸ்ரீ மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல பகுதியிலுள்ள மண்டபங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். 8 ஆம் நாள் விழாவில் வலைவீசி அருளிய லீலைக்காக டி.பி.மெயின் சாலையிலுள்ள மண்டபத்திலும். 9 ஆம் நாள் சப்தாவர்ண சப்பரத்தில் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்த காட்சி அழகு தனி.
விழாவில் 11 ஆம் நாளான புதன்கிழமை கதிரறுப்பு வைபவம்..........ஆஹா மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த பூமி அது அதன் மைப்பகுதியாம் சிந்தாமணியில் நடைபெற்றது. அறுவடைசெய்த நெற்பயிருடன் சுந்தரேஸ்வர்-பிரியாவிடை, ஸ்ரீ மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வியாழக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது இதையொட்டி தெப்பக்குளம் வண்ண மய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பக்குளமும் மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலும் மின்னொளியில் காட்சி அழகானது தெப்பக்குளம் முழுவதும் நீர் நிரைந்த தேர் படகு மிதந்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதில் ஸ்ரீ மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரும் காலை ஒரு முறையும் இரவு ஒரு முறையும் தெப்பக்குளத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி நிறைவாக மனதில் நின்றது.
எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தெப்பக்குளத்தில் அதிகமான தண்ணீர் நிரம்பி அழகுறக் காட்சி அளித்தது பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் வலம் வரும் காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. தெப்பத்திருவிழாவைக் காண பக்தர்கள் ஆவலோடு வந்திருந்தனர்.
கருத்துகள்