சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,64,511-ஐ கடந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதம்.
6 மாநிலங்களில் - மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,623 பேருக்கும், கேரளாவில் 3,792 பேருக்கும், பஞ்சாப்பில் 593 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன், அமைச்சரவை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவரமாக பின்பற்றும்படி அவர் ஆலோசனை கூறினார்.
தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கொவிட் தடுப்பூசி திட்டம் மூலம், மொத்தம்
1,43,01,266 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இதர உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10,000 தனியார் மருத்துவமனைகளும், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதர தனியார் மருத்துமனைகள், மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் கொவிட்-19 தடுப்பூசி மையங்களாக செயல்படவுள்ளன.
மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளை, கொவிட்-19 தடுப்பூசி மையங்களாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த மருத்துவமனைகளின் பட்டியலை
https://www.mohfw.gov.in/pdf/CGHSEmphospitals.xlsx என்ற இணைப்பில் பார்க்கலாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள உள்ள மருத்துவமனைகளை கண்டறிய கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தலாம்.
https://www.mohfw.gov.in/pdf/PMJAYPRIVATEHOSPITALSCONSOLIDATED.xlsx
இதுவரை, மொத்தம் 1.07 கோடி பேர் 1,07,75,169) இதுவரை குணமடைந்துள்ளனர். 11,718 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் குணடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில், எந்த கொவிட் -19 உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கருத்துகள்