பொள்ளாச்சி புதிய மாவட்டமாகும் அறிவிப்பு பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு
பொள்ளாச்சியை மாவட்டமாக்க மக்களின் கோரிக்கையை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற உறுதுணையாக இருப்போமென உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி பேச கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்ததில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து ''பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனியாக மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை,'' என்றார் . அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''விவசாயிகளுக்காக மும்முனை மின்சாரம், பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். விவசாயிகள், பொதுமக்களுக்காக, 'தென்னை நகரம்' என அழைக்கப்படும் பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம், எனவும் பேசினார்..அது பிப்ரவரி 24 ல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை.தென்னை நகரம்' பொள்ளாச்சி, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பெனி ஆட்சியில், 1857 ஆம் ஆண்டில் உதவிக் கலெக்டர் நிர்வாகம் வருவாய்க் கோட்டத்தில் திருப்பூர், உடுமலைபேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி தாலுகாக்கள் உள்ளடங்கியிருந்தன.பனியன் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதால், திருப்பூர் வருவாய்க் கோட்டமானது.
2008 ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டமானது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலிருந்த உடுமலைப்பேட்டை தாலுகாவும், திருப்பூர் மாவட்டத்திலிணைக்கப்பட்டது. உதவிக் கலெக்டர் நிர்வாகத்திலிருக்கும் பொள்ளாச்சிக் கோட்டத்தில், 11 உள்வட்டங்களும், 4 வருவாய் மண்டலங்களும், ஒன்பது சிறப்பு நிலை பேரூராட்சிகளும், நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், 118 கிராம ஊராட்சிகளும், 131 கிராமங்களையும் கொண்ட வருவாய் கோட்டமாகும். பொள்ளாச்சியிலிருந்து, மூன்று உள்வட்டங்களும், 35 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கி ஒரு வருவாய் மண்டலம் பிரிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் கிணத்துக்கடவு தாலுகா தனியாக உருவாக்கப்பட்டது.
கருத்துகள்