சிவகங்கையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற
உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள்சேர்ப்பும் நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுபவர்கள் தங்களது முழுவிவரம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்